🕉 ஒம் நம சிவாய 🕉
🌸 *சிவ சிவ சிவ என்றால் சிவபதமாகுமா?*🌸
______________________________________
கும்பகோணத்தில் அமைந்திருக்கும் மகாமக குளத்தின் அருகில் மளிகைக்கடை நடத்தி வந்தார் குமரேசன் செட்டியார் என்பவர்.
இவர் மனைவி சிவகாமி ஆச்சி. கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து வந்தாள்.
குமரேசன் செட்டியாரும், சிவகாமி ஆச்சியும் சிவ வழிபாடுகளில் ஒழுகியும், அடியார்களுக்கு தொண்டுகள் செய்து வந்தார்கள்.
இவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையாததால், இத்தம்பதியர் ஒருசிறுவனைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
சிவ சிவ என்ற நாமம் தவிர வேறு ஒன்றும் அறியாதவர் குமரேசன் செட்டியார். எந்த வேலை செய்தாலும், எந்த முயற்சியை மேற்கொண்டாலும், பொழுதேனும் சிவநாமத்தை கூறிய வண்ணமே இருப்பார்.
கணவனும், மனைவியும் தினமும் காவிரியாற்றுக்குச் சென்று நீராடுவர். சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவர். அதன் வீடு வந்து சிவனடியார்களுக்கு அன்னமிடுவதை அன்றாடக்கடமையாகச் செய்து வந்தனர்.
அடியவர்களை வரவேற்று அவர்களின் கால்களை கழுவி அழம்புவர். சந்தனம், குங்குமம் கொடுத்து சாப்பாடு கூடத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கமாக செய்து வந்தனர்.
மேலும் அடியவருக்கு என்ன தேவை என கேட்டு அதையே சமைத்து பரிமாறி வந்தனர்.
ஒருநாள் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. வானம் கருமை போர்த்தி இருண்டு கிடந்தது.
வாசல் படியில் செட்டியாரும் சிவகாமியும் உட்கார்ந்தருந்த வண்ணம், அடியார்கள் யாராவது தென்படுகிறார்களா? என பார்த்துக் கொண்டிருந்தனர்.
மழை பெய்து கொண்டிருந்ததால், அடியவர் ஒருவர் கூட அன்று தென்படவில்லை.
அப்போது சிவகாமி தன் கணவரை பார்த்து, அடியார்கள் யாரும் வருவதாய் தெரியவில்லை. ஆகையால் குடையை எடுத்துக் கொண்டு மகாமகக் குளக்கரைக்குச் சென்று அங்கு யாராவது ஒரு அடியார் தென்பட்டால் அழைத்து வாருங்கள் என்றாள்.
புறப்பட்டார் செட்டியார். மகா மண்டபத்தில் அமையப்பெற்ற கோயிலின் ஓரமாய் சாமியார் ஒருவர் மழைக்கு ஒன்டியவாறு இருந்தார். அருகில் சென்றார்.
மேனி முழுவதும் திருநீறு பூசி, தேவாரம் பாடிக் கொண்டு இருந்தார் அந்த அடியவர். அவரை அனுகி தங்கள் வீட்டுக்கு அமுது செய்விக்க வரும்படி அழைத்தார். அடியவரும் சிவ சிவ மொழிந்து புறப்பட்டு செட்டியாருடன் வீடு வந்தார்.
ஆச்சி ஓடி வந்து எதிர்கொண்டு அழைத்தாள்.
பின் அடியாரை வணங்கினாள். சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்றாள்.
அவரிடம், ஐயா! அமுது செய்ய வரும் அடியார்களிடம் உங்களுக்கு எந்தக் காய் பிடிக்கும் என்று கேட்டு அதன்படி செய்வது தருவதை வழக்கமாக கொண்டோம்.
தாங்களுக்கும் என்ன காய்கறி என்று சொன்னால் சமையலைத் தொடங்க வசதியாக இருக்கும் என்றாள்.
என்ன காய்கறிகள் இருக்கிறது? என வினவினார் அடியார்.
சிவகாமியும் வீட்டுப் பின்புறம் காய்கறி பயிரிடப்பட்டிருந்த இடத்திற்கு அடியாரைக் கூட்டிப் போனாள்.
உடனே, அடியார் காய்கறி பயிரிட்டு இருந்த இடத்தை நோக்கி வேகமாக நடந்தார். தம்பதியர் இருவரும் பின்னே சென்றனர்.
அங்கே, ஆய்கறிகளோடு நிறைய முளைக்கீரை வளர்ந்திருந்தது. அக்கீரைகளை கண்ட அடியார், கீரைத் தண்டு சாம்பாரும், கீரை கூட்டும் எனக்குப் போதும் என்றார் அடியார்.
உடனே, செட்டியாரும் தாமதிக்காமல் முளைக்கீரையைப் பறிக்க ஆரம்பித்தார். அடியாரும் கீரையைப் பறித்து கொடுத்து உதவி செய்தார்.
சமைக்கும் போது ஆச்சி, கணவர் பறித்த கீரையையும், சாமியார் பறித்த கீரையையும் தனித்தனியாக வேக வைத்து சமைத்தாள். இதை அடியாருக்கு பார்த்து விட்டார்.
அடியார் பறித்த கீரை சமையலை தனியாக எடுத்துக் கொண்டு பூஜையறைக்கு கொண்டு சென்று சுவாமிக்கு நிவேதனம் படைத்தாள். இதையும் அடியவரானவர் பார்த்து விட்டார்.
இதையெல்லாம் கண்டதும் அடியாருக்கு பெருமை தாங்கவில்லை. அடியவரான என் கை பட்ட கீரைக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்பதால், பூஜையில் வைத்துதருவதாக எண்ணி மகிழ்ந்தார்.
அடியார்க்கு உணவை பரிமாறும்போது, சாப்பிட்டுக் கொண்டே சிவகாமியிடம் தன் சந்தேகத்தை கேட்டார்.
சிவகாமி அடியரிடம், ஐயா! எனது கணவர் கீரையை பறிக்கும் போது சிவநாமத்தைச் சொல்லிக் கொண்டே பறித்ததார் ஆதலால், அந்த கீரை சிவக்கீரை ஆகி விட்டது. அதனால், அதை பூஜையில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லாமல் ஆகிவிட்டது.
ஆனால், நீங்களோ அமைதியாகக் கீரையைப் பறித்து கொடுத்தீர்கள். அதனால், அதை சுவாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டியதாகி போனது என்றாள்.
இதைக் கேட்ட சாமியாருக்கு, தன் தலையில் இடி இறங்கியது போலிருந்தது. இவர்களின் சிவபக்தியில் முன்பு தனது அடியார் துறவறம் போலியானது என்று எண்ணி வெட்கி தலை குனிந்தார். வணங்கி விடை பெற்று சென்றார். சிவாமியும் செட்டியாரும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.
இவர்களின் தொண்டு இவ்விதம் தொடர்ந்து கொண்டிருக்கையில், ஒருநாள் சிவராத்திரியன்று அந்த தெய்வத்தம்பதியர் கும்பகோணம் கும்பேஸ்வரைத் தரிசித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினர்.
கும்பேஸ்வரர் ஆலயத்தில் பெற்ற பிரசாதத்தை பூஜையறையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த சிவகாமி ஆச்சி, பூஜை அறையிலேயே சிவ சிவ என்ற சொல்லியபடியே சிவபதம் சேர்ந்தார்.
"சிவ சிவ" என ஒவ்வொன்றுக்கும் தொடக்கம் தந்து வந்த சிவகாமியார் சிவ சிவ என சொல்லியபடி, முக்தி பேறை அடைந்தார்.
மனைவி மேல் உயிரையே வைத்திருந்த செட்டியாரும்,... சிவ சிவ என்று கூறி சிவகாமி சரிந்ததை பார்த்து, 'சிவகாமி' என கூவ செட்டியாரும் அவள் மீது சாய்ந்து கண்களை மூடி சிவபதம் சேர்ந்தார்.
அதுவும், சிவராத்திரி நாளில் தம்பதியர் இருவரும் ஒரே நேரத்தில் சிவனடி சேர்ந்ததை எண்ணி ஊரார் அனைவரும் அதிசயித்து நின்றனர்.
1938 ஆம் வருடம் கும்பகோணத்தில் வாழ்ந்த இத்தம்பதியர்கள் இவர்களாவர்.
இவர்கள் செய்த அன்னதானத்தை காஞ்சிப்பெரியவர், தன்னை பார்க்க வந்தவர்களிடம் பெருமையாகக் கூறியதுண்டு.
அடியார் என்று சொல்வதிலோ, அடியார் என்று வழியொழுகுவதிலோ எந்த நன்மையும் வராது.
விபூதி தரித்தலும், உருத்திராக்கம் அணிதலும் ஒழுக்க நெறியே! ஆனால் அதெல்லாம் சிவனடியார் எனக் கூறச் சொல்லும் அடையாளம்.
இந்த விபூதி, உருத்திராக்கத்துக்குள்ளிலிருந்து, தன்னை வருத்தி அடியார் தொண்டை செய்வோமாயின் ஈசன் பார்வை ஒரு நாள் நம்மீது ஒளிரும்.
ஈசனும், தன்னை யார் வணங்குகிறார்கள் என பார்ப்பதில்லை. அடியார்களுக்கு யார் தொண்டு புரிகிறார்கள் என்பதைத்தான் பார்க்கிறார்.
அப்படித்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களையும் பார்த்தார்.
அந்த நாயன்மார்களின் தொண்டில், ஒரு குண்டூசி நுனிமுனையளவு கூட நம்மிடம் இல்லை.
முதலில் அதைச் செய்ய முயலுவோம்!
உண்மையான சிவ அடியாராக நெறிபிறழாதிருப்பவர்களுக்கே, வீடுபேறு, முக்திபேறு வாய்க்கும்.
அப்படியில்லாத பட்சத்தில் வெறும் *'அடியார்'* அவ்வளவுதான்.
திருச்சிற்றம்பலம்.
___________________________________
*அடியார்களுக்கு தன் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
_🕉 ஒம் நம சிவாய வாழ்க🕉
https://www.hindhu.news
No comments:
Post a Comment