Wednesday, February 27, 2019

நீங்கள் கூட ஜ்யோதிஷராகலாம்

பாவ கட்டம் எவ்வாறு செயல்படும்?

இராசி கட்டம், நவாம்ச கட்டம் போன்று பாவ கட்டம் முதன்மையானது. இதை பலர் எடுக்காமல் பலன் சொல்கின்றனர்.

தசா புத்தி அந்தரம் இவை அணைத்தும் பாவ கட்டம் பொருத்தே செயல்படும்.
இராசி சக்கரத்தில் எந்த  யோகம் இருந்தாலும் அதே கிரக சேர்க்கை பாவக கட்டத்தில் இல்லை எனில் யோகத்தை தசா புத்தி வாயிலாக செயல்படுத்த இயலாது. அப்போது அந்த யோகத்தை அனுபவிக்க இயலாது.

உதாரணத்திற்கு இராசி கட்டத்தில் மகர லக்னத்தில் சந்திரன் செவ்வாயும் இணைவு இருப்பதாக கொள்வோம். இது சந்திர மங்கள யோகம். இதே சந்திரன் பாவக கட்டத்தில் 12ஆம் பாவமான தனுசு ராசியில் இருந்து செவ்வாய் லக்னத்தில் இருந்தால் சந்திர மங்கள யோகமாக தசா புத்தியில் செயல்படாது. மாறாக 12 ஆம் இடம் விரைய ஸ்தானம் என்பதால் சந்திரன் தசா புத்தி அந்தரங்களில் விரையாதிபதி போல் நடப்பார்.

இன்னொரு உதாரணம் இராசி கட்டத்தில் மிதுன லக்னத்துக்கு 11ல் சூரியன் உச்ச திக்பலம் பெற்று இருந்து பாவக கட்டத்தில் 10 ஆம் வீடான மீனத்தில் இருந்தால் தசா புத்தி அந்தரங்களில் 10ஆம் வீட்டில் அமர்ந்த கிரகம்  போல் உச்ச பலத்தில் தொழில் வளர்ச்சி தருவார்.

(குறிப்பு: இராசி கட்டத்தில் ஒரு லக்னம் இருக்கும் 2 மணி நேரத்தில் பாவக கட்டத்தில் கிரகங்கள் மாறி நிற்கும் வாய்ப்பு அதிகம். ஆதலால் பிறந்த நேரம் சரியாக இருக்க வேண்டும்.)

இவ்வாறாக பாவக கட்டம் வைத்து பார்ப்பது நல்லது.

No comments:

Post a Comment