Monday, February 25, 2019

ஆழ்வார் திருநகரி என பெயர் பெற்றது ஏன்

திருமங்கை மன்னன் காலத்தில் திருவரங்கத்து திருவாய்மொழி திருநாள் உற்சவத்தில்  ஆழ்வார்திருகர் நம்மாழ்வார் எழுந்தருள பண்ணிய வரலாறு.

திருமங்கையாழ்வார் தம்முடைய வாழ்நாளின் பிற்பகுதியில்,திருவரங்கத்தில்,திருவரங்கனுக்கு சிறப்பான பல கைங்கர்யங்களை செய்துகொண்டு எழுந்தருளி இருந்தார்.

ஒரு கார்த்திகைத் திருநாளில்,நம்பெருமாள் உபய நாய்ச்சிமார்களுடன் திருமஞ்சனம்கண்டருளிய பிறகு,திருமங்கையாழ்வார் ,திருநெடுந்தாண்டகம் என்கின்ற பிரபந்தத்தை தேவகானத்தில் பாடி நம்பெருமாளை
மகிழ்வித்தார்.அதன் பிறகு திருவாய்மொழி பாசுரங்களைக்கொண்டு பாடி நம்பெருமாளை உகப்பித்தார்.

இதனால் பெரும்மகிழ்ச்சிகொண்ட நம்பெருமாள்,
“ஆழ்வாரே நாம் உமக்கு என்ன செய்ய வேண்டும்” என்று வினவினார். அதற்கு திருமங்கையாழ்வார் “மார்கழிமாதம் சுக்லபக்ஷ ஏகாதசி தொடங்கி கொண்டாடப்படும் வேதத்திற்க்கான ஏற்றமிகு விழாவில்,அந்த வேதங்களுடனே நம்மாழ்வார் அருளிச்செய்த,”திருவாய்மொழியையும்”கேட்டு, வடமொழி வேதத்திற்கு நிகரான பெருமையை ,நம்மாழ்வார் தமிழில் அருளிச்செய்த,”திருவாய்மொழிக்கும்” தந்தருள வேணும் என்று விண்ணப்பித்தார்.
ஒரு நொடிகூட தாமதிக்காமல் ‘தந்தோம்’ என்றான் பெரிய பெருமாள். (வேதம் தமிழ் செய்த மாறனாம் ஸ்வாமி ஶ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு வேதம் போன்று பெருமையளிக்க வேண்டும். ஏற்கெனவே அந்தப் பெருமை இருந்தாலும், அதை உலகறியக் கொண்டாட வேண்டும் என்பதே கலியனின் விருப்பம். அதைத்தான் இன்று கேட்டார். அக்காலத்தில் ஆழ்வார் திருநகரியில்தான் நம்மாழ்வார் எழுந்தருளியிருந்தார். ஶ்ரீரங்கத்தில் ஆழ்வாரின் விக்ரஹத்திருமேனி இல்லை என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.)

இசை வெள்ளத்தில் மிதந்த ஶ்ரீரங்கம் இப்போது ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியது. உடனடியாக கட்டளைகள் பறந்தன. தனது கைங்கர்யபரர்கள் அனைவரையும் ஆழ்வாரை (நம்மாழ்வார்) எழுந்தருளப்பண்ண, ஆழ்வார் திருநகரிக்குச் செல்லும்படி பணித்தார் அமரர் தலைவன். அதுவரையிலும் தனது உத்ஸவங்களை நிறுத்திக்கொண்டான்.

நம்பெருமாளும் பெரிதும் உகந்து,தேவகானத்தில் பாடிய திருமங்கையாழ்வார் “திருமிடர் நோவும்” என்று, திருமங்கையாழ்வாரின் தொண்டையிலே,தைலக்காப்பை தடவச் செய்து,ஸ்வாமி நம்மாழ்வாரை “ஆழ்வார்திருநகரியில்” இருந்து,அழைத்து வருவதற்கான, ஸ்ரீமுகப்பட்டயம், மாலை,பரியட்டம்,சந்தனம் ஆகியவற்றை அனுப்பி கௌரவித்தார்.
ஆழ்வார் எழுந்தருளி பகல்பத்து, இராப்பத்து என்று இருபது நாட்கள் அத்யயன உற்சவம் தொடங்குவதற்கு ஏற்பாடானது.

கலியனின் கார்த்திகையில் கார்த்திகை நாள் தொடங்கி தை ஹஸ்தம் (ஆழ்வார் திருவடி தொழுது மறுபடியும் ஆழ்வார் திருநகரிக்கு ஆழ்வாரைக் கொண்டு கொண்டு விடும் காலம்) வரையில் திவ்யப்ரபந்த சேவாகாலத்துக்கு அனத்யயனம் (ஓதாத காலம்) ஏற்படுத்தப்பட்டது. அதாவது, நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியிலிருந்து திருவரங்கத்துக்கு அழைத்துவந்து எழுந்தருளச்செய்து மீண்டும் ஆழ்வார்திருநகரியிலேயே எழுந்தருளப் பண்ணுவார்கள்.

அப்போதிலிருந்து ராமானுஜர் காலம் வரை  ஆழ்வார் திருநகரியில் அர்ச்ச ரூபமாக உள்ள நம்மாழ்வார் ஸ்ரீரங்கங்கத்தில் அத்யயன உற்சவத்திற்காக எழுந்தருள பண்ணினர்.

ஆனால் இப்போது அது நடைபெறுவதில்லை அன்றே ராமானுஜர் இந்த வழக்கத்தை மாற்றினார் ஒரு முறை ஆழ்வார்திருநகரியில் இருந்து திருவரங்கம் எழபண்ணும் போது ஏற்பட்ட பெரும்வெள்ளம் மற்றும் கலியின் கொடுமையால் திருடர்கள் மாற்றுமதத்தினரின் அச்சுறுத்தல் போன்ற பல காரணங்களால் உடையவர் திருவரங்கத்தில் ஒரு நம்மாழ்வார் விக்ரஹம் எழப்பண்ணி உற்சவங்கள் நடைபெறுகிறது.

குறுகூர் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரிலேயே அத்யயன  காலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் குறுகூரில் எழுந்தருளுகிறார்..

Dhanush M

No comments:

Post a Comment