Tuesday, February 26, 2019

யாரிந்த அஜித் தோவலெனும் ப்ராம்ஹணர் இந்திய ராணுவ கதாநாயகன்

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்" என்றார் வள்ளுவர்.  அதாவது யாரிடம் எந்த பொறுப்பை தர வேண்டும் என்று ஆராய்ந்து அதை அவர்கள் வசம் முழுமையாக ஒப்படைத்தல் எனப் பொருள்.  நரேந்திர மோடி இந்த செயல்பாட்டில், மிகச்சிறந்தவராக திகழ்கிறார்.  நம் ராணுவத்தை உலகத் தரம் வாய்ந்ததாக உருவாக்க வேண்டும்,  சுயசார்பு கொண்டதாக மாற்ற வேண்டும் என்று தீர்மானித்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்ற வெகு சில நாட்களிலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய‌ அஜிஜ் தோவல் அவர்களை நியமிக்கிறார் மோடி.  இந்திய ராணுவத்தை மோடி அவர்கள் எப்படி மேம்படுத்தினார் என்பதை பார்ப்பதற்கு முன்,  நம்மில் பலரும் அறிந்திராத அஜித் தோவல் அவர்களின் பங்களிப்பை குறித்து நாம் அறிந்தாக வேண்டும். ஜேம்ஸ் பாண்ட் 007 கதைகள் எல்லாம் இவரின் சாகசங்களோடு ஒப்பிடுக்கையில் ஒன்றுமே இல்லை.

யார் இந்த அஜித் தோவல் ?

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 'கர்வாலி' எனப்படும் பிராமண குடும்பத்தில் ஜனவரி 1945ல் பிறந்தார் 'அஜித் தோவல்'.  தந்தை ஒரு ராணுவ அதிகாரி.  அஜ்மீர் ராணுவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து,  பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பை ஆக்ரா பல்கலைகழகத்தில் முடித்தார். 1968ல் கேரளத்தில் ஐ பி எஸ் அதிகாரியாக உருவாகினார். மூன்றாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த 'எம் கே நாராயணன்' அவர்களிடம் தீவிரவாத தடுப்பு பயிற்சியை பெற்றார்.  அதன் பின் பல விமான கடத்தல் சம்பவங்களில் பயங்கரவாதிகளோடு சமரசம் பேசுவதிலும்,  பண‌ய‌க் கைதிகளை மீட்பதிலும் மதி நுட்பத்தோடு வெற்றிகரமாக செயல்பட்டார்.

மிசோரம் மாநிலத்தில் 'மிசோ தேசியப் முன்னனி' எனும் தனி நாடு கேட்டு போராடும் தீவிரவாத இயக்கத்தின் அராஜகம் எல்லை மீறி சென்றுக் கொண்டிருந்தது.  அஜித் தோவல்,  தன்னுடைய பின்புலத்தை மறைத்துக் கொண்டு அந்த தீவிரவாத படைகளில் சேர்ந்து, இந்திய ராணுவத்திற்காக ஒற்றனாக செயல்பட்டார்.   பர்மாவின் 'அரக்கன்' பகுதியிலும்,  சீனாவிற்குள்ளும், அவர் யாரும் அறியாத வகையில் ஊடுறுவி அங்குள்ள நிலையை ஆராய்ந்து, இந்திய ராணுவத்திற்கு தகவல்கள் தெரித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக, மிசோ தேசிய முன்னனியில் இருந்த கமேண்டோக்களோடு நெருங்கிய நட்பை உருவாக்கி, அதனுள் பிளவுகளை உருவாக்கி,  அந்த இயக்கத்தையே உருதெரியாமல் சிதைத்தார் அஜித்  தோவல். 

தனி நாடாக இருந்த சிக்கிம் இந்தியாவோடு இணைய விருப்பம் தெரிவித்திருந்தது.  இந்த இணைப்புக்கு சீனா பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால்,  கள ஆய்வு மேற்கொள்ள சிக்கிமிற்குள் ஒற்றனாக ஊடுறுவினார் அஜித் தோவல்.  சிக்கிம் இந்தியாவோடு வெற்றிகரமாக இணைக்கப்பட்டதற்கு இவரின் மதிநுட்பமும் மிக முக்கிய காரணி என்கிறார்கள் ராணுவ வல்லுனர்கள்.

1980 களில் காலிஸ்தான் எனும் பெயரில் சீக்கிய தீவிரவாதிகள் தனிநாடு கேட்டு வந்தனர். சீக்கிய கோயில் முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.  அஜித் தோவல் ஒரு ரிக்ஷா ஓட்டுபவர் போல் நடித்து பொற் கோயிலுக்குள் ஊடுறுவினார்.   புதிய நபரான அஜித் தோவல் பொற்கோயில் வளாகத்தில் திரிவது காலிஸ்தான் பயங்கரவாதிகள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியது.  அவரை பிடித்து அவர்கள் விசாரித்த நிலையில்,  தான் ஒரு பாகிஸ்தானிய ஒற்றன் என்றும் காலிஸ்தான் இயக்கத்திற்கு தனி நாடு அமைக்க‌ உதவுவதற்காக பாகிஸ்தானால் அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே பொற்கோயிலுக்குள் 1984இலும் அதன் தொடர்ச்சியாகவும் இரு முறை இந்திய ராணுவம் நுழைந்து தாக்குதல் தொடுத்திருந்தது.  அந்த இரண்டு முறையும் பொது மக்கள் அதிகம் இருந்த நிலையில் உயிர்சேதம் அதிகமாகியது. இது உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, இந்திரா காந்தியின் படுகொலைக்கு வித்திட்டது. அதனால் 1988ல் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என தீர்மானித்திருந்தது இந்திய ராணுவம். அஜித் தோவல் பொற் கோயிலுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை இந்திய ராணுவத்திற்கு தகவல் தந்த வண்ணம் இருந்தார்.  வெறும் நாற்பது பேரே பொற்கோயிலுக்குள் இருப்பார்கள் என இந்திய ராணுவம் கணித்திருந்த நிலையில் அஜித் தோவல், இருநூறு பேருக்கு மேல் உள்ளே உள்ளார்கள் என்பதை கண்டறிந்து,  தாக்குதலை கைவிடுமாறும்,  பொற்கோயில் வளாகத்துக்குள் தேவையான மின்சாரத்தையும்,  தண்ணீர் இணைப்பையும் துண்டிக்குமாறும் அறிவுறுத்தினார்.  விளைவு ?  கொதிக்கும் கோடையில் தண்ணீர்,  மின்சாரம் இல்லாமல் வெறும் ஒன்பதே நாட்களில் உள்ளே இருந்த தீவிரவாதிகள் அனைவரும் சரண‌டைந்தார்கள்.  கத்தியின்றி ரத்தமின்றி ஆப்பரேஷன் 'பிளாக் தண்டர்' வெற்றி பெற்றது, காலிஸ்தான் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்தார் அஜித் கோயல்.  'கரன் கர்ப்' எனும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அஜித் தோவலின் இந்த பங்களிப்பை குறித்து மாய்ந்து மாய்ந்து விவரிக்கிறார்.  அவர் ஒரு 'அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கர்' (எதையும் வித்யாசமாக யோசிப்பவர்) என்று அஜித் தோவலை புகழ்கிறார் 'கரன் கர்ப்'.

அடுத்து தோவலுக்கு காஷ்மீர் பிரச்சனையில் முக்கிய பணி தரப்பட்டது.   காஷ்மீருக்குள் சென்ற தோவல்,  அங்கு 'ஜம்மு காஷ்மீர் அவாமி லீக்' எனும் பெயரில் இயங்கிக் கொண்டிருந்த 'குக்கா பரே' எனும் 'முகம்மது யூசுஃப்போடு' தொடர்பை ஏற்படுத்தி,  அவரை நல்வழிப் படுத்தி, காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு எதிராக அவரை இயங்க செய்தார்.  இதன் மூலம் காஷ்மீர் தீவிரவாதிகள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டன, காஷ்மீர் தேர்தலை அமைதியாக நடத்திட முடிந்தது.  காஷ்மீர் தீவிரவாதிகளால் 2003ல் குக்கா பரே சுட்டுக் கொல்லப்படும் வரை, தீவிரவாதத்திற்கு பெரும் முட்டுக் கட்டையாக இருந்தது குக்கா பரே வின் இயக்கம். 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக,  அஜித் தோவல்,  பாகிஸ்தானுக்குள் ஒன்றனாக ஏழு வருடங்கள் ஊடுறுவியதைதான் குறிப்பிட வேண்டும். 

தொடர்ந்து பயனிப்போம்.
prakash P

No comments:

Post a Comment