Saturday, March 2, 2019

இனி அமெரிக்க நாடு பாகிஸ்தான் க்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்ய தயங்கும் அவலம்

🛫🚀🛩. 😡😡. 🛩🚀🛫.

மிகபெரும் சிக்கலில் பாகிஸ்தானை தள்ளியிருக்கின்றது இந்தியா, நிச்சயம் மிக்பெரிய ராஜதந்திர நகர்வு அது

என்ன அது?

பாகிஸ்தான் எப் 16 விமானத்தை இந்தியா ஏன் மிக சிரமபட்டு வீழ்த்தியது, அதுவும் அபிநந்தன் உயிரை பணயம் வைத்து மீட்டது என்பதில் பல விஷயங்கள் உள்ளன, அவை சுவாரஸ்யமானவை

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அதிநவின எப்16 விமானங்களை கொடுக்க முயன்றபொழுது இந்தியா ஆட்சேபித்தது, எங்களுகும் வேண்டும் என்றது அமெரிக்கா இருவருக்கும் அப்பொழுது கொடுக்கவில்லை

பின் என்னாயிற்று என்றால் பாகிஸ்தான் ஒரே பிச்சையாக அமெரிக்காவிடம் கேட்டுகொண்டே இருக்க "தற்காப்புக்கு மட்டும் எப்16 ரக விமானத்தை பயன்படுத்தலாம், இந்தியா மேல் தாக்க கூடாது" என்ற நிபந்தனையில் பாகிஸ்தானுக்கு கொடுக்க சம்பதித்தது

அப்பொழுதும் முன்பு ஹாஜி நீர்மூழ்கி போல சும்மா கொடுக்கவில்லை, பாகிஸ்தான் விலைகொடுக்க வேண்டும் என்றார்கள், அவ்வளவு பணம் பாகிஸ்தானிடம் இல்லை

இதனால் ஜோர்டானிடம் இருந்த பழைய எப்16 விமானத்தை வாங்கினார்கள், அமெரிக்காவோ அதே பழைய நிபந்தனையுடன் பாகிஸ்தான் எல்லையினைவிட்டு இவை நகர கூடாது என கண்டிப்புடன் அனுமதித்தது

ஜோர்டான் ஒரு அமெரிக்க அடிமை பொம்மை நாடு என்பது ரகசியமல்ல‌

இப்படித்தான் எப்16 பாகிஸ்தானுக்கும் வந்தது, இந்தியா ரஷ்யாவிடமிருந்து சுகோய் ரகங்களை வாங்கினாலும் பாகிஸ்தானின் எப்16ஐ குறித்துகொண்டே இருந்தது

இந்நிலையில் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதும் நிச்சயம் பாகிஸ்தான் தாக்க வரும் என கணித்த இந்தியா எந்த வகை விமானம் வரும் என கணக்கிட்டது

பாகிஸ்தானிடமும் மிராஜ் உண்டு, சீன தயாரிப்பான செங்க்டு உண்டு மற்றும் ஜே17 என்ற வகை உண்டு ஆனால் சிறந்தது எப்16 ரகமே

இந்தியாவின் கணக்கு வேகமானது மற்ற விமானங்கள் வருவதை விட எப்16 வந்தால் விடகூடாது அதில் அரசியல் காரணங்கள் உண்டென கருதித்தான் மிக சிரமபட்டு எப்16ஐ வீழ்த்தியது

கவனித்தீர்களா?

அதை வீழ்த்தியவுடன் "எங்களை தாக்க வந்த‌ பாகிஸ்தானின் எப்16ஐ வீழ்த்தினோம்" என சொல்லிகொண்டே இருந்தது இந்தியா,

பாகிஸ்தானோ வாய்திறக்கவில்லை

ஆனால் ஆதாரம் அவர்கள் ராணுவத்தில் யாரோ எடுத்த படத்தில் வந்தது, ஆம் பாகிஸ்தான் பகுதியில் வீழ்ந்து கிடக்கும் எப்16 விமான பாகங்களை பாகிஸ்தான் வீரர்கள் பார்க்கும் படங்களை அவர்கள் தரப்பே வெளியிட்டது

அவ்வளவுதான் இந்தியா அதை கச்சிதமாக பிடித்து சொல்லவேண்டிய இடத்தில் சொல்லிற்று

எங்கள் நாட்டுக்குள் தாக்க வந்த பாகிஸ்தான் விமானங்களை சுட்டோம், பாகிஸ்தான் தாக்க வந்த ஆதாரம் வேண்டுமா?

"இதோ இம்ரான்கானே இந்தியாமேல் தாக்குதல் நடத்த எங்களால் முடியும் என காட்டவே எம் விமானங்கள் இந்தியாவில் நுழைந்தன.."  என சொல்லியிருகின்றார்

(ஆம் வாயால் மாட்டினான் அழகன்)

ஆக எப்16 இந்தியாவினை தாக்க கூடாது என்ற உங்கள் நிபந்தனை மீறபட்டுள்ளது, பாகிஸ்தான் ஒரு பொய் நாடு" என சொல்லிற்று

பாகிஸ்தான் பல்லைகடித்து கொண்டு அபிநந்தனை இழுத்து செல்லுங்கள் என சொல்லிகொண்டிருக்க இப்படிபட்ட காரணங்களும் உண்டு

இனி பாகிஸ்தான் எப்16 விமானம் மூலம் தாக்க வருவது சிரமம், சீன தயாரிப்பு விமானங்கள் வந்தால் என்னாகும் என உங்களுக்கே தெரியும்

அதுவும் பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து செய்தால் எப்படி இருக்கும்?

இந்திய ராணுவம் மிக தந்திரோபாயமான நடவடிக்கையில் ஈடுபட்டு பாகிஸ்தானை கட்டிபோட்டிருக்கின்றது

பாகிஸ்தான் அமெரிக்க ஆயுதங்களால் அவமானபடுவது முதல்முறை அல்ல‌

பேட்டர்ன் டாங்க் கொடுத்தார்கள், உடைக்கமுடியா அதை இந்திய படைகள் உடைத்து அவமானம் கொடுத்தபின் பாகிஸ்தானிடமிருந்து அதை திரும்ப பெற்றார்கள்

பெரும் நீர்மூழ்கியினை கொடுத்தார்கள், ஹாஜி என அதை வைத்து 1971ல் பாகிஸ்தான் கண்ணாமூச்சி ஆடியது, இந்திய கடற்படை அதை நொறுக்கி போட "நீ நாசமாய் போ.." என ஒதுங்கியது அமெரிக்கா

இப்பொழுது அவர்களின் சாகச விமானமான எப்16ஐ இந்தியா நொறுக்கிபோட "ஏண்டா உனக்கு எவ்வளவு உதவினாலும் உருப்பட மாட்டியா?" என ரகசியமாக முறைக்க தயாராகின்றது அமெரிக்கா

வீரத்தில் மட்டுமல்ல தந்திர நகர்வுகளிலும் முத்திரை பதிக்கின்றது இந்தியா

ராயல் சல்யூட் india..
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

No comments:

Post a Comment