Praise the lord shiva.
#வேளாங்கண்ணிசிவாலயம்
ஆதியும் அந்தமும் இல்லாத மஹாதேவன் சிவபெருமானின் சக்தி ஆதிபராசக்தி அன்னை பார்வதியின் கோயிலே #வேல் இளங்கண்ணி அதைத்தான் அன்றைய கிறித்தவ கயவர்கள் வேளாங்கண்ணி என மாற்றியுள்ளனர்.
பைபிளில் எங்குமே இல்லாத பெயர் வேளாங்கண்ணி மேலும் வேளாங்கண்ணி என்ற பெயருக்கான அர்த்தமே அவர்களுக்கு தெரியாது.
அது ஒரு சிவாலயம் தேவாரத்தில் அதற்க்கான சான்று இருக்கிறது.
என்ன ஆச்சரியாமாக இருக்கா வாங்க விரிவா பாக்கலாம்.
வேளாங்கண்ணி -
நம்மில் பலர் நினைப்பதுபோல் இது கிரித்தவத் தலமன்று, சைவத் திருத்தலம்.
‘கண்ணி’ அழகிய விழிகள் பொருந்திய மகளிரைக் குறிக்கும் சொல். ‘காமக்கண்ணியார்’ குறிஞ்சித் திணை சார்ந்த அகப்பாடல்கள் பாடிய சங்ககாலப் பெண்பாற் புலவரது பெயர்.
தேவாரப் பாக்களை ஊன்றிப்படிக்கும்போது அம்பிகையின் பெயர்கள் பல தெரியவருகின்றன.
வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி” ; அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம்.
”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
'வேலனகண்ணி'யொடும் விரும் பும்மிடம்.........”
- திருஞானசம்பந்தர்
சேல் [மீன்] போன்ற கண் அமைவதால் “சேலன கண்ணி”, வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”. பிற்காலத்தில் வேளாங்கண்ணி எனத் திரிந்தது. [வேலன கண்ணி, சேலன கண்ணி - உவமையால் அமையும் பெண்பாற் பெயர்கள்]
”கருந்தடங் கண்ணி” என்னும் பெயரும் அம்மைக்கு உண்டு. ”வேலினேர்தரு கண்ணி” எனவும் தேவாரம் அம்மையைப் போற்றுகிறது. ”இருமலர்க் கண்ணி” இமவான் திருமகளாரின் மற்றோர் அழகிய பெயர். மதுரையம்பதியின் மங்காப்புகழுக்குக் காரணம் மலயத்துவசன் மகளார் அன்னை அங்கயற்கண்ணியின் ஆளுமை.
கோடியக்கரை - குழகர் ஆலயத்தில் அம்மையின் நாமம் ’மைத்தடங்கண்ணி’ ; சுந்தரர் தேவாரம்.
சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒருசேர வருகை புரிந்து வழிபட்ட மிக முக்கியமான திருத்தலம். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த இடம் சுட்டப்படுகிறது. இதுவும் ஒரு கடற்கரைச் சிவத்தலம்.
“வாள்நுதற்கண்ணி” அன்னையின் கடைக்கண்பார்வை வீச்சு ஸ்தாணுவாக -பட்டகட்டையாகத் தவத்தில் ஆழ்ந்திருந்த ஐயனைச் சலனமடையச் செய்தது. விளைவு ? “ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய”
[”ந சேத் ஏவம் தேவோ ந கலு குஶல: ஸ்பந்திதும் அபி”- ஸௌந்தர்ய லஹரி கூறுவதை நினைவு கூர்க]
’இருமலர்க்கண்ணி’ - உபயபுஷ்ப விலோசனி
சீயாத்தமங்கை. திருவாய்மூரை அடுத்துள்ளது. [இது அன்பர் Sureendar Raman அவர்கள் தரும் தகவல்]
அம்பிகைக்கு “மானெடுங்கண்ணி” என்றும் ஒரு திருநாமம். ’மான்போன்ற மருண்ட பார்வையை உடையவள்’ என்பது பொருள் -
’மானெடுங்கண்ணி’ மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம் ஏது என
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்.....
அம்பிகையின் கயல் போன்ற விழிகளைக் காழிப்பிள்ளையார் பாடுகிறார் -
’நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில்
”சேலன கண்ணி”வண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்.....’
அழகியலில் தோய்ந்த தமிழடியவர்கள் அம்மைக்கு எண்ணற்ற இனிய நாமங்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர். அவற்றுள் சில - காவியங்கண்ணி, நீள் நெடுங்கண்ணி, வேல்நெடுங்கண்ணி, வரி நெடுங்கண்ணி, வாளார் கண்ணி.
வேளாங்கண்ணிக்கருகில் சுமார் 10கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது.இதெல்லாம் தேவாரப் பாதிப்பன்றி வேறில்லை என உறுதிபடச் சொல்ல முடியும்.
www.thevaaram.org
தேவாரம் மட்டும்தான் அம்மையின் கண்ணழகைப் பலவாறாகப் போற்றுகிறது என முடிவு செய்ய வேண்டா. திருவாசகமும் போற்றியுள்ளது -
மாவடு வகிரன்ன கண்ணி பங்கா, நின் மலரடிக்கே கூவிடுவாய் ! -திருவாசகம்
சிவாலயங்கள்தோறும் ஓரிரு பதிகங்களையாவது பளிங்குப் பலகைகளில் பொறித்து வைப்பது அரசின் கடமை.
தமிழ்ச்சைவ வரலாற்றில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய செய்தி ஒன்று : சமய குரவர் காலத்திற்குப்பின் எழுந்த சிவாலயங்களிலும் தேவார மூவர் அமைத்த முறையில் இறைவர் - இறைவியர்க்கு அருந்தமிழ்ப் பெயர்களே வழங்கின என்பதே அது.
கீழ்க்கடற்கரைப் பகுதியில் சைவம் செழிப்புற்றிருந்தது. கீழைக் கடல் சார்ந்த பல ஆலயங்கள் - திருவொற்றியூர், மயிலைக் கபாலீசுவரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம், நாகபட்டினம் காயாரோஹணேசுவரர் ஆலயம், கோடியக்கரைக் குழகர் ஆலயம், வேதாரண்யம் -காரைக்கால் - புகார் ஆலயங்கள் போன்றவை முக்கியமானவை. வேளாங்கண்ணி ஆலயமும் இவற்றுள் ஒன்று.
மீனவரான அதிபத்த நாயனார் அரனாருக்கு மீனை அர்ப்பணித்து முத்தி பெற்றார்.
மயிலையில் மட்டும் வாலீசுவரர், மல்லீசுவரர், வெள்ளீசுவரர், காரணீசுவரர், தீர்த்த பாலீசுவரர், விரூபாக்ஷீசுவரர் எனும் தலங்கள்; கபாலீசுவரர் ஆலயம் தவிர. தருமமிகு சென்னையில் பேட்டைகள் தோறும் இன்னும் பல சிவாலயங்கள். இங்கு அவற்றைப் பட்டியலிடவில்லை.
திருவதிகை வீரட்டானம் - அப்பரடிகள் வரலாற்றோடு தொடர்புடையது; சமய குரவர் பாடல் பெற்ற தலம்.
சுவாமி - வீரட்டானேசுவரர்
அம்மை - பெரியநாயகி
திருச்சோபுரம் - சம்பந்தர் பாடிய கடல் தலம். கடலூர் அருகில்.
சுவாமி - சோபுரநாதர்
அம்மை - வேல்நெடுங்கண்ணி
மரக்காணம் - பூமிநாதர் ஆலயம். சோழர் திருப்பணி.விழுப்புரம் மாவட்டம்.
திருச்சாய்க்காடு - காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தே அமைந்துள்ள ஒரு கடல் தலம்.
கோச்செங்கட் சோழர் செய்த மாடக்கோயில். இயற்பகை நாயனார் வழிபட்டு, முத்தி பெற்ற
திருத்தலம். நாவுக்கரசரும், காழிப்பிள்ளையாரும், ஐயடிகள் காடவர்கோனும் பாடியுள்ளனர். போருக்குத் தயாராக வில்லேந்திய வேலவரை இவ்வாலயத்தில் காணலாம். எதிரிகள் தொல்லையால் பாதிப்புக்கு உள்ளானோர் முருகனை வழிபட்டுத் துயர் நீங்கப்பெறலாம்.
சுவாமி : சாயாவனேச்வரர்
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே !
- திருஞானசம்பந்தர்
நாகூர் - நாகவல்லி அம்மை உடனுறை நாகநாத ஈசுவரர் கோயில் கொண்ட கடல் தலம்.நாகநாத சுவாமியால் நாகூர் எனும் பெயர். காமிகாகமத்தை ஒட்டியதாக அமைந்த மிகப் பழமையான ஆலயம் இது. நாகூர் தர்கா பின்னர் மராட்டிய மன்னர் ஆட்சிக்காலத்தில் தோன்றியது. நாகவல்லி அம்மை உடனுறை நாகநாதரே உண்மையான ‘நாகூர் ஆண்டவர்’.
திருவலம்புரம் :
சுவாமி : வலம்புரநாதர்.
அம்மை : வடுவகிர் கண்ணி.
அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி
யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே !
இது ஒரு கடல்தலம் என்பது அப்பரடிகளின் பாடல் வாயிலாகவே தெரிகிறது. தற்காலத்தில் இத்தலம் ‘மேலப்பெரும்பள்ளம்’ எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. புகாருக்கருகில் அமைந்த தலம். தேவார முதலிகள் மூவரும் பாடியுள்ளனர்.
கடற்கோளுக்கு முறபட்ட பழைய புகார்ப்பதியில்
”பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,
அறு முகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும்..”
இருந்ததாகச் சிலம்பு கூறும்.
இன்றைய புகார்ப்பதியில் –
சுவாமி : பல்லவனேசுவரர்.
அம்மை : சவுந்தரிய நாயகி.
சீர்காழிக்குக் கிழக்கே 13 கிமீ தொலைவில்
அமைந்துள்ள கடல்தலம் -
தென்திருமுல்லைவாயில் :
சுவாமி : முல்லைவன நாதர்
அம்மை : கோதையம்மை
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
திருமுல்லை வாயி லிதுவே !
- சம்பந்தர் தேவாரம்
தீர்த்தாண்டதானம் :
சுவாமி : தீர்த்தமுடையவர்
அம்மை : பெரியநாயகி
முகவை மாவட்டத் தலம்; இராமபிரான் வழிபட்டார்.
முருகப்பெருமான் போருக்குப் புறப்படுமுன்பாக முக்கட்பிரானை வழிபட்ட கடல் தலம் திருச்செந்தூர்; புராண ஆதாரம் உள்ளது. செந்திலம்பதியின் சிவ லிங்கங்கள் -
https://www.facebook.com/100007047586455/videos/1785090635069172/
இராமேசுவரம் இராமபிரான் வழிபட்ட உலகப்புகழ் பெற்ற கடல் தலம்.
”மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்......”
- சம்பந்தர் பூம்பாவைப் பதிகம்
கடற்கரைத் தலங்களில் மாசி மகம் தீர்த்தவாரிக்கு இறைத் திருமேனிகளைக் கடற்கரைக்குக் கொண்டு சென்று தீர்த்தவாரி செய்விப்பது இன்றுவரை நடைபெற்று வரும் திருவிழா.
இன்றைய வேளாங்கண்ணியில் ரஜத கிரீசுவரர் சிவாலயம் ஒன்று அமைந்திருப்பதும் நம்மில் பலருக்கும் தெரியாத தகவல். இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா ? ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
*******************************************************************
சில நூற்றாண்டுகளுக்குமுன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறி அவற்றைக் கைப்பற்றிய கிரித்தவர் ஆலயங்களை அழித்தனர். சென்னை கபாலீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம் - கிரித்தவச் சகிப்புத்தன்மைக்கு மிகச் சிறந்த சான்றுகள்.
புதுவையில் வாழ்ந்த துவிபாஷி ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் தம் நாட்குறிப்பில் ஆலயச் சிதைப்புக் குறித்த விவரங்கள் பதிவு செய்துள்ளார் -http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pillai/
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும் இது பற்றி எழுதியுள்ளார். ஆலயச் சிலைகள் அகற்றப்பட்டன. பெருமாள் கோவிலின் படிமங்கள் புதுவைக்கருகில் வைத்திக்குப்பம் கடற்கரையில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டன. 1748ல் புதுவையின் பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன. எஞ்சியவை ஒருசில ஆலயங்களே.
வேளாங்கண்ணிப் பகுதி சைவம் செழிப்புற்றிருந்த இடம். புதையுண்ட ஐம்பொன் படிமங்கள் பல கிடைத்துள்ளன.
கொங்கணப் பிராந்தியத்திலும் பல ஆலயங்களை மேற்கத்தியர் அழித்தனர். 1567ல் போர்த்துகீசிய மிஷநரிகள் கோவாவில் தரைமட்டமாக்கிய ஆலயங்களின் எண்ணிக்கை 350. இந்துக்கள் துளசிச்செடி வளர்ப்பதற்குக்கூடத் தடை இருந்தது.
http://www.newindianexpress.com/education/student/Goa-Inquisition/2015/09/03/article2979630.ece
****************************************************************
INCULTURATION - ஹிந்துக்கள் கலாசாரத்தைக் காப்பி அடித்து மதம் பரப்பும் முயற்சி.
காவி உடை அணிதல், ஆலய விமானங்களின் பாணியில் சர்ச் எழுப்புதல், சர்ச்சுக்கு முன்பாகக் கொடிமரம் நிறுவுதல், ’வேதாகமம்’,‘ஸுவிசேஷம்’ 'அக்னி அபிஷேகம்' , ‘ஸர்வாங்க தகன பலி’ போன்ற சங்கதச் சொற்களை வலிந்து புகுத்துதல், கொடியேற்றுதல், தேரிழுத்தல் போன்ற சடங்குகளைத் தம் சமயத்துக்குள் புகுத்தி இந்துக்களைக் கவர்ந்து மதம் பரப்பும் முயற்சியின் அங்கமாக மேரிக்குத் தமிழர் முறையில் சேலை அணிவித்து , ‘வேலன கண்ணி’ எனும் பெயர் வேளாங்கண்ணியாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
உமையன்னைக்கே உரிய ‘பெரிய நாயகி’ எனும் நாமத்தையும், பெரியநாயகி மாதா எனக் கிரித்தவர் மேரியினுடையதாக மாற்றிக்கொண்டு விட்டனர்.
https://www.google.co.in/search?q=inculturation&espv=2&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwiY65Tz5ODMAhVBm5QKHcciDg0Q_AUICCgC&biw=911&bih=401
இந்து தெய்வங்களைச ஒருபுறம் இகழ்ந்துகொண்டு, மறுபுறம் இந்து தெய்வப் பெயர்களைக் கவர்ந்து மேரிக்குச் சூட்டுவதும் , இந்துச் சடங்குகளைக் கைப்பற்றித் தமதாக்கிக் கொள்வதும் எந்த விதத்தில் நியாயம் தெரியவில்லை.
ஆலயங்கள் சீரழிந்ததை ஆதாரம் காட்டி எழுதியுள்ளேன். ஆலயங்களைக் காக்கும் வலிமை இல்லாவிட்டாலும் ஐம்பொன் சிலைகளையாவது பாதுகாப்போம் என நம்மவர்கள் அவற்றை பூமிக்குள் புதைத்து வைத்த சோக நிகழ்வு பல இடங்களிலும் நடந்துள்ளது. இன்று ஆங்காங்கு அவை வெளிப்படுவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். பதிவு மிக விரிவடைவதால் இன்னும் பல ஆதாரங்களைப் பதியவில்லை.
No comments:
Post a Comment