Tuesday, March 12, 2019

பெண்களுக்கு மட்டும் அல்ல இது பெற்றவருக்கும்



நாகரீக பெண்களே வணக்கம்.
பொள்ளாச்சி துயரத்தை தாங்க முடியாத பெண் குழந்தையின் தந்தையாக எழுதுகிறேன்....
நாகரீக பெண்களே..
உண்மையான  தோழமைக்கும் , உடலுக்காக ஏங்கி உங்கள் பின் திரியும்
தருதலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நீங்கள்..?

ஆத்மார்த்தமான அன்புக்கும்,
உங்களை அணைக்க மட்டுமே அலையும்
அற்ப புத்தி  ஆண்களுக்கும் வித்தியாசம்
அறியாதவர்களா நீங்கள்..?
இரவலாகவோ , சொந்தமாகவோ, ஒரு இருசக்கர வாகனம் வாகனங்கள் வைத்திருப்பது மட்டுமே வாழ தகுதி...?
கண்டபடி முடியை வெட்டிக் கொண்டு
கழிசடை தமிழ் சினிமா கதாநாயகன்  போன்ற  செயற்கையான தோற்றம்
உங்களை ஈர்க்க  போதுமான ஒன்றா...?
காலை முதல் இரவு வரை நேரிலும் , கைபேசியிலும் தொடர்ந்து உங்கள்
பின் தொடருபவன்  வேலை வெட்டி இல்லாதவன் , வேறு நோக்கம் உள்ளவன் என்பதை கூடவா அறியாதவர்கள் நீங்கள்....?
இதை பார்த்து உண்மை காதல் என்றும் நட்பு என்றும்
ஏமாந்து விட்டேன்  என்கிற அளவுக்கு தான் உங்கள் அறிவு உள்ளதா..?
எல்லாவற்றையும் விட தனியாக இருக்கும் வீட்டிற்கு அழைத்த பின்புமா
உனக்கு வந்த ஆபத்தை நீ உணரவில்லை..?
நீங்கள் கற்ற கல்வியின் பலன் இவ்வளவு தானா..?
உன் வயதில் அடுத்த தெருவு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வர உன் தாத்தாவிடம் கால் வலிக்க நின்று அனுமதி வாங்கிய உன் அம்மாவுக்கு வராத பாதிப்பு உனக்கு வருகிறது என்றால் உனக்கு கொடுக்கப் பட்டது சுதந்திரமா..?  சாபக்கேடா..?
கைபேசியையே  கட்டிலுக்குள்  மறைத்து வைத்து எங்களுக்கு எல்லாமே தெரியும்
என்று ஏமாந்து நிற்கும் நாகரீக பெண்களே...
ஏமாந்ததும் , பாதிப்பு அடைந்ததும் நீங்கள் மட்டுமே அல்ல
உங்கள் மீது நம்பிக்கை வைத்த உங்கள் குடும்பமும் , இந்த சமூகமும்தான்...
அனைத்தும் Google ல் கிடைக்கும்
நல்லதும் , கெட்டதும் சேர்த்து..
ஆனால் பெற்றோர்களிடம் இருந்து "நல்லது மட்டுமே" கிடைக்கும்.
எனவே அருமை சகோதரிகளே
கல்வியுடன் சேர்ந்து மனிதர்களின்
மனநிலையையும் சேர்த்து படியுங்கள்.
கைபேசியை ஆபத்துக்கு உதவும்  உபகரணமாக மட்டுமே பயன்படுத்துங்கள்...
வாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும் , உபத்திரவம் தரும் வகையிலும் பயன்படுத்தாதீர்கள்.
நாடக காதல் நாதாரிகளிடம் சிக்கி சீரழிய வேண்டாம்...
பெற்றோர்களே
நம் வாழ்நாட்கள் என்பது பணம்   சம்பாதிப்பதற்கு மட்டுமே  இல்லை.
குழந்தைகளின் முகம் பார்த்து அவர்கள் உள்ளம் அறியும் அளவுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.
நீங்காத நல்ல நினைவுகளும் நல்ல சம்பாத்தியமே..
தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே அதில் சந்தேகம் இல்லை..
இப்படிக்கு ஒரு"தந்தையின் கண்ணீர் குமறல்....
அடுத்து...
நீ அழகா இருக்கே,
உன் கேரக்டர் புடிச்சிருக்கு,
Friendly யா பேசுறதுல என்ன தப்பிருக்கு,
இதெல்லாம் இந்த காலத்துல ரொம்ப சகஜம்,
சரியான பட்டிக்காடா இருக்கியே,
Facebook ல தானே பேசுறங்க,
சும்மா பேசிப்பாரு,
என்னது boyfriend டே இல்லையா,
எனக்கெல்லாம் ரெண்டு மூணு பேரு
இருக்காங்க,
இந்த காலத்துல எந்த பொண்ணு
தப்பு பண்ணாம இருக்கு,
Teenage ன்னா அப்படி இப்படிதாம்பா
இருக்கும், இதெல்லாம் சகஜம்,
சீரியஸா நீ அந்த மாதிரி
ஒரு வீடியோ கூட பார்த்ததே இல்லையா,
Friend கூட சினிமா போனா என்ன தப்பு,
இதெல்லாம் கூட வீட்ல சொல்வாங்க,
சும்மா ஜாலி டிரிப் தானே,
Hot வேணாம் beer வேணா லைட்டா
சாப்பிட்டு பாரு, ஜூஸ் மாதிரி தான் அது,
தயவு செஞ்சி வீட்ல மட்டும் சொல்லிடாத
அப்புறம் வெளியவே விடமாட்டாங்க,
எல்லாத்துக்கும் சந்தேகப்படுவாங்க,
Photo வச்சி என்ன பண்ண போறான்,
அதெல்லாம் ஒண்ணும் இல்ல அனுப்பு,
சும்மா லவ் பண்ணி பாரு,
Set ஆனா ஓகே,
இல்லன்னா breakup பண்ணிடு
அவ்ளோதானே...
இதுக்கு ஏன் பயப்புடுறே..
Etc etc etc
இவையெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லை
பொள்ளாச்சியில் நடந்தது போன்ற
அத்தனை பாலியல் பிரச்சனைகளும்
இது போன்ற சாதாரண உரையாடல்களில்
இருந்து தான் தொடங்குகிறது,
வளர்கிறது, அல்லது தூண்டப்படுகிறது.
காமுகர்களைப்பற்றிய போதுமான
விழிப்புணர்வு இல்லாமல் மிக ஆபத்தான
சமூகவலைதளங்களில் உலாவருவதும்,
ஒழுக்கத்தின் மீதான மதிப்பை
இழந்துவிட்டதும், சினிமாவை வாழ்க்கையோடு
பொருத்தி வாழ்வதும், பொறுப்பற்ற வளர்ப்பும்,
பொய் பேசுவதும், தவறை மறைப்பதும்
தாமே தீர்வு தேடுவதும் போன்ற
பலப்பல காரணங்கள் சேர்ந்து
இரக்கமற்ற நவீன கொடூர இளைஞர்களிடம்
சிக்கி நாசமாக போக காரணமாக இருக்கிறது,
எது நடந்தாலும் ஆரம்பத்திலேயே
பெற்றோரிடம் சொல்லிவிடும்
பெண் பிள்ளைகள் பெரும்பாலும்
இதுபோன்ற நரகத்தில் சிக்குவதில்லை....
இழந்ததை திரும்ப பெறமுடியாது,
இனி இருக்கின்ற பெண்களாவது
மேலே சொன்ன ஆபத்தான
போலி வார்த்தைகளை நம்பி
ஏமாறாமல் இருக்கவேண்டும்...


1 comment:

  1. சூப்பர் அட்வைஸ்.

    ReplyDelete