Friday, March 1, 2019

பாதி சிலை க்ருஷ்ணண் பாதிசிலை ருக்மிணி அதிசய கோவில்

gkiyer:
அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைபாதிந்த அபூர்வ கோலமான சம்மோஹன கிருஷ்ணரை பற்றி உங்களுக்கு தெரியுமா? 
இந்த மூர்த்தி தான் கோபால சுந்தரியும் ஆகும்.

நம்மில் அந்நேகம்பேர் சிவன் பார்வதி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் 
வடிவம் பற்றியும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் பற்றியும் தெரிந்திருப்போம்.

ஆனால் அதே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோஹனூரில் 
ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான
சம்மோஹன கிருஷ்ணர் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலை பற்றி அதிகம்பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி,இந்த ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான
சம்மோஹன கிருஷ்ணரின் சிறப்புகள் என்ன?அவரை வழிபடுவதால் என்ன பலன்?
அ/மி கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலை பற்றிய சிறப்புகள் என்ன? ஆகிய விரங்களை அறிந்து கொள்ளவே இந்த பதிவு.

பூரணஅலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழைபொழியும் 
கண்களோடு  அருள் பொழியும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமானசம்மோஹன கிருஷ்ணர்திருகோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். 

சகல சௌபாக்யங்களும்  வந்து சேரும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும்.அனைத்து சம்பத்துக்களும் சேரும்.

இத் திருக்கோலத்தை உபாசித்தால் குபேர வாழ்வு பெறலாம்.

இந்த கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமானசம்மோஹன கிருஷ்ணர்திருக்கோலம் எங்குள்ளது தெரியுமா?  

நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்  
மகா மண்டபத்தின் வலதுபுற விளிம்பில் தனிச்சன்னதியில்
அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணன் அருள்பாலித்து வருகின்றார்.

இந்த சம்மோகன கிருஷ்ணரையும்
அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணரையும் தரிசிக்க மோஹனூர் செல்வோமா?

அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்   

மூலவர்:கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் 
உற்சவர்:சீனிவாசர் 
அம்மன்/தாயார்:பத்மாவதி 
தல விருட்சம்:வில்வம் 
தீர்த்தம்:காவிரி ஆகமம்
பூஜை:வைகானஸம் 
பழமை:500 வருடங்களுக்குள் 
புராண பெயர்:மோகினியூர் 
ஊர்:மோகனூர் 
மாவட்டம்:நாமக்கல் 
மாநிலம்:தமிழ்நாடு 

தல சிறப்பு:காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு.

அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலத்தை தரிசிப்பது தனிச்சிறப்பு. 

இத்தல இறைவன் கல்யாண
பிரசன்ன வெங்கட்ரமணர் 
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

காவிரியம்மனுக்கும் தனிசன்னதி இருக்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஐப்பசி மாதத்தில் இவளுக்கு காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கிறது.

சன்னதியின் மேல் விதானத்தில் நவகிரக மரச் சிற்பங்கள். அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

தலபெருமை:

திருப்பதியில் ஓர் நாள்:

இத்தல சுவாமி கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் வேதஸ்ருகங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் கோயில் உருவாக்கப்பட்டதால், நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் "திருப்பதியில் ஓர் நாள்' என்னும் உற்சவம் நடக்கிறது. 

அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது.

திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே, அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். 

இங்குள்ள உற்சவரும் விசேஷமானவர். பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படடிருக்கும். 

ஆனால், இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது.

தன்வந்திரி சன்னதி:சுவாமி சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கிறது. எதிரே கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். இவர்களை வழிபட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

தன்வந்திரிக்கு, மூலிகைகள் கலந்த சூர்ணம் பிரதான நைவேத்யமாக படைக்கப்பட்டு, சுக்குப்பொடி, நாட்டுச்சர்க்கரை, நல்லெண்ணெய் மற்றும் மூலிகைள் சேர்ந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர்.

ஒவ்வொரு திருவோணத்தின்போதும் மாலையில் சத்யநாராயண பூஜை நடக்கிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடுகிறார்கள். 

பூஜை முடிந்தபின்பு தேங்காயை வீட்டு பூஜையறையில் வைத்து பூஜிக்க ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

குரு, சிஷ்யை தரிசனம்:சுவாமி கோஷ்டத்தில் லட்சுமி ஹயக்ரீவர் இருக்கிறார். இவருக்கு எதிரே மேதா சரஸ்

ர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர், காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது, கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட  புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார்.பக்தர் மிகுந்த சந்தோஷப்பட்டார். புற்றை உடைத்து பார்த்த போது, உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு, "கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்' என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர, பத்மாவதி தாயாருக்கு தனிசன்னதி கட்டப்பட்டது.    

திருவிழா: புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார்.    

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

போன்:+91- 4286 - 256 100, 94429 57143.

No comments:

Post a Comment