Thursday, March 7, 2019

மாதங்கி ராஜஷ்யாமளா வழிபாடு நல்ல அறிவை தரும் குழந்தைகளுக்கு

gkiyer:
 *மாக விஜயதசமி*
ஸ்ரீ மாதங்கி என்கிற ஸ்ரீ ராஜஸ்யாமளா ஒரு வரப்பிரசாதி.
அவளை மனதார சிந்தையில் நிறுத்தி துதிப்பவருக்கு சகல செளபாக்கியங்களை தாராளமாக அளித்திடும் அம்பிகை.
இவள் பராசக்தி எடுத்த தசமகாவித்யா அவதாரங்களில் ஒன்பதாவதான மாதங்கி, பெரிதும் போற்றி வணங்கப்படுகிறாள்.
ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் மாதங்கி.
அமுதமயமான கடலின் நடுவில் ரத்தினத் தீவில், கற்பக மரங்கள் செறிந்த காட்டில், நவமணிகளால் இழைக்கப்பட்ட மண்டபத்தினுள், தங்க சிம்மாசனத்தில் இந்த தேவி அமர்ந்தருள்கிறாள். மணித்வீபத்தை பற்றி பின்பு தனிப் பதிவிடுகிறேன். அது நமது மஹாராணியான பராபட்டாரிகா ராஜராஜேஸ்வரி லலிதா மஹா த்ரிபுரசுந்தரி அன்னையின் வசிக்கும் இடம். அதனுள் இருப்பவர்கள் பல தேவதைகள்.
மதங்க முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு மகளாக அவதரித்ததால் மாதங்கி எனப் பெயர் பெற்றாள். மகிஷாசுர வதத்தின்போது இவள் சும்ப-நிசும்பர்களை வதைத்தவள் என சப்தசதீ பெருமையுடன் போற்றுகிறது.
மகாதிரிபுரசுந்தரி, பண்டாசுரனுடன் வதம் செய்ய முற்பட்டு நிகழ்த்திய பெரும் போரில், மாதங்கி, விஷங்கன் எனும் அசுரனை அழித்தாள் என லலிதோபாக்யானமும் இவள் புகழ் பாடுகிறது.
வாக்விலாசத்திற்கும் அறிவின் விருத்திக்கும் இவள் அருள் கட்டாயமாகத் தேவை. புலவர்களை மன்னர்களுடன் சரியாசனத்தில் வைக்கக் கூடிய வல்லமை இவளுக்கு உண்டு.
உபாசகர்கள் உள்ளத்தில் பசுமையை, குளிர்ச்சியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்பவள் இத்தேவி. இவளை ராஜசியாமளா என்றும் அழைப்பர்.
மாதங்கியின் மந்திரம், 98 எழுத்துக்கள் கொண்டதாகும். மாதங்கி மந்திரம் ஒருவருக்கு சித்தியாகிவிட்டால் உலகில் உள்ள மற்ற வேத மந்திரங்கள் உட்பட அனைத்துமே ஒரு முறை படிப்பதாலேயே சித்தியாகும் என #மதங்கமனுகோசம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவமே மாதங்கி. லலிதாம்பிகையின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் இவள், அந்த லலிதா பரமேஸ்வரிக்கே ஆலோசனை கூறும் மந்த்ரிணீயானவள்.
இவளின் ரதம் கேயசக்ர ரதம் என அழைக்கப்படுகிறது. கேயம் எனில் பாட்டு. கேயசக்ர ரதம் அசைந்து வரும்போது, அதன் ஒலி, சங்கீதமாய் கானம் இசைக்கும்.
எப்போதும் தவழும் புன்முறுவலுடனும் சுழன்று மயக்கும் விழியுடையவளாக இத்தேவி விளங்குகிறாள்

No comments:

Post a Comment