Monday, March 4, 2019

R S S காரன் நாட்டின் பிரதான மந்த்ரி ஆனதால் அண்டமெல்லாம் நடுங்குது

இஸ்ரேல் எந்த வளமும் இல்லாத பாலைவன நாடு.சுமார் 800 சதுர மைல் பரப்பளவே கொண்ட மிக சிறிய நாடு.மக்கள் தொகை சுமார் 85 லட்சம்தான்.

இஸ்ரேலைச் சுற்றிலும் இஸ்லாமிய நாடுகள்தான் இருக்கின்றன.எகிப்து,பாலஸ்தீனம்,ஜோர்டான்,சிரியா,லெபனான்,அரேபியா,ஈராக்.

கடந்த காலங்களில் மேற் சொன்ன இஸ்லாமிய நாடுகள் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இஸ்ரேலை அழிக்க பல முறை முயன்று விட்டன.இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்விதான்.

1967-ம் ஆண்டு இஸ்லாமிய சகோதரத்துவம்  என்றபெயரில் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலை ரவுண்டு கட்டினார்கள் விளைவு?இந்த நாடுகள் தங்கள் நாட்டின் சில பகுதிகளை இஸ்ரேலிடம் இழந்தன.

நேர்முகமாக இஸ்ரேலை தோற்கடிக்க முடியாது என்று நினைத்த பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேல் மீது மறைமுக தாக்குதலில் ஈடுபட்டன.

குண்டு வைப்பது ராக்கெட்டை வைத்து தாக்குவது என அனைத்தையும் கையாண்டன.தீவிரவாத தாக்குதலை திறம்பட எதிர் கொண்டது இஸ்ரேல்.இன்று உலகிலேயே சிறந்த உளவு படை எதுவென்றால் அது இஸ்ரேல் நாட்டின் மோசாட் தான்.

உள்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாத காரணத்தால் வெளிநாடுகளில் இருக்கும் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகள்.

1972-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற 11இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை  Black September என்ற பாலஸ்தீன இயக்கத்தினர் கொலை செய்தனர்.

அவர்களை சுமார் 20 ஆண்டுகள் உலகம் முழுவதும் தேடி வேட்டையாடி கொன்றது இஸ்ரேல்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தினால்?இந்திய அரசாங்க நிலைப்பாட்டை இங்கு ஒப்பிடுக.

இதையடுத்து 1976-ம் ஆண்டு ஜீன் 27-ம் தேதி இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்விலிருந்து பாரிஸ் நகருக்கு சென்ற விமானத்தை பாப்புலர் ஃப்ராண்ட் என்ற பாலஸ்தீன தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பும் சேர்ந்து விமானத்தை கடத்தினார்கள்.

கடத்தப்பட்ட விமானம் உகாண்ட நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டது. அப்பொழுது உகாண்டாவை ஆட்சி செய்து கொண்டு இருந்தவர் இடி அமீன்.இவர் பாலஸ்தீன தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு கொடுத்து வந்தவர்.

விமானத்தில் மொத்தம் 316 பேர் இருந்தனர்.தீவிரவாதிகளின் கோரிக்கை,இஸ்ரேல் சிறையில் உள்ள 40 தீவிரவாதிகளையும்,கென்யா நாட்டில் உள்ள 13 தீவிரவாதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால் அனைவரையும் கொன்று விடுவோம் என மிரட்டினார்கள்.

இஸ்ரேலில் இருந்து 4000 கி.மீ.தொலைவில் உள்ளது கடத்தப்பட்ட விமானம்.தீவிரவாதிகளிடம் பேசிக் கொண்டே,நான்கு  கனரக விமானங்களில் 100 ராணுவ வீரர்களும்,ராணுவ தளவாடங்களும் ஆயுதங்களும் ஏற்றப்பட்டு,எந்த நாட்டு ரேடர்களிலும் படாமல்,இரவு11 மணிக்கும் மேல் கடல்மார்க்கமாகவே சென்று உகாண்டா நாட்டிற்கே தெரியாமல் தீவிரவாதிகளையும் கொன்று,அனைவரையும் காப்பாற்றி,விடிவதற்குள் தன் நாட்டிற்கே வந்துவிட்டனர் இஸ்ரேல் ராணுவத்தினர்.

1990-ல் வி.பி.சிங் அமைச்சரவையில்,மத்திய உள்துறை அமைச்சராக முக்தி மொஹமது சையித் பதவி வகித்தப்போதுதான் அவருடைய 3-வது மகள் கடத்தப்பட்டார்,பதிலுக்கு 5 பயங்கரவாதிகளை விடுவிக்க தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.இறுதியில் மத்திய அரசு பணிந்து விடுவித்தது.

இந்த தவறான முன் உதாரணம் தான் பின்னர் 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் காந்தஹாருக்கு கடத்தி செல்லப்பட்ட ஏர் இந்தியா  விமானத்தில் இருந்தவர்களை பணயமாக வைத்து அவர்களை விடுவிக்க வேண்டுமானால்,நம்மிடம் இருந்த மூன்று பயங்கரவாதிகளை விடுதலை செய்ய கோரிக்கை வைத்தனா் கடத்தல்கார்கள்.

காங்கிரஸூம் மற்ற கட்சிகளும் சேர்ந்து பாஜக விற்கு எதிராக அரசியல் பண்ணுகிறேன் பேர்வழி என்று பொதுமக்களை தூண்டிவிட்டு கடத்தப்பட்டவர்களின் உறவினா்களை முன்னிருத்தி ஊடகங்கள் துணைக்கொண்டு ஆர்பாட்டம், போராட்டம் என வாஜ்பாய் அரசுக்கு பல வகைகள் தொல்லை நிறைந்த அழுத்தங்களை தந்தனா்.

இதனால் எதிர் தாக்குதல் நடத்திருக்க வேண்டிய தருணம் தப்பியது.

தனி விமானத்தில் மத்திய அமைச்சரே அழைத்து சென்று அவர்களிடம் ஒப்படைத்து விட்டு,கடத்தப்பட்ட விமானத்தில் இருந்தவர்களை மீட்டுவந்தனர்.

அப்படி அன்று ஒப்படைக்கப் பட்டவனில் ஒருவன்தான் ஜெய்ஷ் இ மொஹமது இயக்கத்தின் இன்றைய தலைவன் மசூத் அசாத்.இவன்தான்  இப்பொழுது நம் ராணுவத்தை கொன்றவன்.நம் பாரத தேசத்தையே அணுகுண்டு வீசி அழிப்பேன் என பேசி ஆடியோ வெளியிட்டன்.

இவனை அன்று கைது செய்ய சுமார் 300,400,ராணுவ வீரர்களை இழந்து இவனை பிடித்து கைது செய்து வைத்திருந்தவனை அரசு விடுகிறதே என்று,அப்பொழுது ஒரு ராணுவ அதிகாரி வருத்தப்பட்டார்.
நம் நாட்டு  சமாதானமாக போகலாம் என்றும்,நம் ராணுவத்தை இழக்க நேரிடும் என்றும்,இது அரசியல் என்றும்,அவனுக்கு இஸ்லாம் நாடுகள் சப்போட் செய்யும் என்றும்,சீனா மற்றநாடுகளும் சப்போட் செய்யும் என்றும் புத்தரை போன்றம்,ஏசுவை போன்றும் உபதேசம் செய்கின்றனர்.

சின்னஞ்சிறு இஸ்ரேல் எப்படி சிந்திக்கின்றான்?செயல்படுகின்றான்?அவனை சுற்றிலும் செல்வந்த இஸ்லாம் நாடுகள்தான் அவனை எதிர்த்து நிற்கின்றன. அவர்களால் ஒரு இஸ்ரேலியன் கொல்லப்படால் அடுத்த நிமிடம் 10 இஸ்லாமியரை கொல்வான்.உடனுக்குடன் பதிலடி கொடுக்கிறது.ஆளும் கட்சி,எதிர்கட்சி என்ற எந்த பாகுபாடும் இந்த விஷயத்தில் அவர்கள் நாட்டில் கிடையாது.வாக்கு வங்கி அரசியல் கிடையாது.நடுநிலைவாதி என்ற போர்வையில் சுயநலவாதிகள் இல்லை.எவனும் அரசு எடுக்கும் நடவடிக்கையை விமர்சனம் செய்யமாட்டான்.அவர்களுக்கு பதவியை விட,பொருளாதாரத்தை விட நாடு பெரிது என கருதும் மானம் ரோசம் உள்ள புத்திசாலி மக்கள் நிறைந்த நாடு. நாம் இப்போழுதுதான் உண்மையான இந்தியனை ஆட்சியில் உட்காரவைத்துள்ளோம் அதன் பலன்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நம் பாரத பிரதமா் மோடி ஜி தொடுத்துள்ளாா் வேட்டை இன்னும் முழுபலத்துடன் தொட௫ம். ஜெய் ஹிந்த்

நன்றி
சிவதுரை ஜி

No comments:

Post a Comment