Saturday, April 13, 2019

ஶ்ரீராம நவமீ மற்றும் ராமர் ஜாதகம் பலன்கள்

ராம நவமி ஸ்பெஷல் !

ஸ்ரீ ராமர் ஜாதகத்தை வணங்குதல் புண்ணியத்திலும் புண்ணியம் !!

மகிமை வாய்ந்த இந்த ராமர் ஜாதகத்தை பூஜை இடத்தில் எழுந்தருளப்பண்ணி தினமும் பக்தி சிரத்தையுடன் ஆராதித்து வரவேண்டும். இந்தப் புனிதமான ராமர் ஜாதகத்தை பூஜிப்பவர்களுக்கும் வைத்திருப்பவர்களுக்கும் ஜாதகரீதியாக இருக்கும் நவக்கிரக தோஷங்கள் விலகுவதுடன் சகலவிதமான பிணிகளும் நீங்கும். மேலும் ஐஸ்வரிய அபிவிருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும் ரகுகுல நாயகனின் அருளால் உண்டாகும்
கிரக தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ ராமர் ஜனன ஜாதகம்.இந்த ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்தால் கிரக தோஷ பீடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ராமனும் ராமாயணமும்!

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் ராம அவதாரம். ராமன் தன் அவதாரம் மூலம், உலகுக்கு உணர்த்தாத பொருளே இல்லை, உரைக்காத உண்மையில்லை. தந்தை சொல் கேட்டல், உடன்பிறப்பு ஒற்றுமை, தாய்க்குச் சிறந்த மகனாக இருத்தல், வாக்குத் தவறாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏகபத்தினி விரதம் - இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்.
ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர்.

ஓர் இல் - ஒரு மனைவி.
ஒரு சொல் - வாக்குத் தவறாமை.
ஒரு வில் - குறி தவறாத ராம சரம்.

ஸ்ரீ ராம ஜெயம் !!! மர்யாதா புருசோத்தமன் ஏகபத்னீ வ்ரதன் தசரத நந்தன் ஸ்ரீ இராமச்சந்திரன். ராமநாமமே தாரகமான தலை சிறந்த மந்திரம் காசியில் தகனம் செய்யப்படும் பிரேதத்தை  ஸ்ரீ காசி விஸ்வநாதர் தன் மடியிலிட்டு  தாய் விசாலாட்சி தன் முந்தானையால் விசிறி விட "ராம" நாமம் செல்லி தான் ஜீவமுக்தி தருகிறார். காசியில் ஸப்த ரிஷி பூஜா தீபாராதனை விஷ்வநாதருக்கு உன்டு அப்போது சமர்பிக்கப்படும் வில்வபத்ரத்தில் ஸ்ரீ ராம நாமம் எழுதி தான் ஸமர்பனம்.எனவே ஸ்ரீ ராம நவமியாம் ராம ஜனனோஸ்சவத்தில் ஸ்ரீ ராம நாமமாம் தாரக மந்திரத்தை சதா ஜபித்து(அட்சர லட்சம் ஜெபம் செய்து) வாயு புத்திரன் மாருதி ராயனின் அருளோடு ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் அருளை நாடுவோம்.

(காசியில் பிரேதங்களை எரியூட்ட (யதாஸ்தானம்  செய்ய எடுத்து வருகையிலும்  ஸ்ரீ ராம நாமம் தான் (ஸ்ரீ ராம் நாம் சத்யஹே).

தேசப்பிதாவின் ஸ்மரன நாமமும் ராம நாமம் தான் . (அவர் சென்ன கடைசி வார்த்தையும் இராம நாமம் தான்).

ஸ்ரீ வித்யா சம்ப்ரதாயத்திலும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீ ராம சகோதரி.

ராமம ராம ராம ராம ராம ராம ராம ராம.ஜெய் ஸ்ரீராம்.

ஜானஹி காந்தஸ்மனம் ஜெய் ஜெய் ராம ராம.

No comments:

Post a Comment