Tuesday, May 28, 2019

ஶ்ரீக்ருஷ்ணர் முதன்முதலில் அஹம்காரம் நீக்கியது யாருக்கு தெரியுமா?

யசோதாவிடம் கட்டுண்ட கிருஷ்ணன் : --

கிருஷ்ணர் வெண்ணெய் வேணும்னு யசோதாவை கேட்டார் . அவள் தரமாட்டேன் என்று சொல்ல, கெஞ்சி கேட்கிறார். ஒன்றும் வேலைக்காகாமல் போகவே ஒரு கழியை எடுத்து தாழியை உடைத்துவிடுகிறார்.

அவள் தலை மேல் இருந்ததால் பானை உடைந்து வெண்ணெய் அவள் மேல் விழுகிறது. கோபம் கொண்ட யசோதா அவரை அடிப்பதற்கு துரத்துகிறாள். அவர் கோகுலம் முழுக்க ஓட, தளர்ந்து போன யசோதா அவரை கயிறு எடுத்து உரலுடன் கட்டிவிட முயல்கிறாள்.

எத்தனை பெரிய கயிறை எடுத்தாலும் இரண்டு அங்குலம் குறைவாகவே ஆகிவிடுகிறது.

அப்போது இதை பார்த்துக் கொண்டிருந்த நாரதர் தாயே இறைவனை அகங்காரத்தால் கட்ட முடியாது. பல பெரிய மகான்களும் ரிஷிகளும் கோபத்தாலும் அகங்காரத்தாலும் இறைவனை கட்ட முயன்று தோற்றுவிட்டார்கள்.

ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இந்த இரண்டு அங்குலம் தான் தூரமாக கடைசி வரை நின்றுவிடுகிறது. இந்த இரண்டு அங்குல தூரத்தை கடந்து இறைவனை அடைந்தவர் மிக சொற்ப மனிதர்களே.

எப்போது அகம்பாவத்தை விட்டு கோபத்தை விட்டு அவனை சரணடைகிறோமோ அப்போது தான் அவனை அடையமுடியும். அது கூட நாம் அடைய முடியாது. அவனே உவந்து நம்மை அணைத்தால் தான் அவனுடன் சங்கமமாகிறோம்.

இது காதில் விழுந்தது போல யசோதா என்னால் உன்னை கட்ட முடியவில்லை கண்ணா. நான் தோற்றுவிட்டேன். நீயே சொல். உன்னை எப்படி கட்டுவதென்று என்று கயிறை கீழே போடுகிறாள்.

அவள் சிறியது என்று கீழே போட்ட கயிறை எடுத்து தன்னை தானே கட்டிக் கொள்கிறாள் கிருஷ்ணர். அவள் வியந்து பார்க்கிறாள்.

No comments:

Post a Comment