Saturday, August 3, 2019

மரியாதை என்பதென்ன மஹாபெரியவா நடந்து நடந்து காட்டிய தருணம்


மதிப்பது ஒரு பண்பு...
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்...
கும்பகோணத்தில் 1933 ஆம் ஆண்டு மகாமகப் பெருவிழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள மகாப்பெரியவர் காஞ்சியிலிருந்து திருப்பனந்தாள் வழியாக யாத்திரை மேற்கொண்டார்.
திருப்பனந்தாள் எல்லையை அடைந்த உடனே ஸ்வாமிகள் பல்லக்கு விட்டு இறங்கி நடக்கத் தொடங்கினார். உடன் வந்தவர்கள் வியப்பு அடைந்தனர். திருப்பனந்தாளின் தென்கோடி வந்தவுடன் மீண்டும் பல்லக்கில் ஏறி கும்பகோணம் மடத்தை அடைந்தார்.
மடத்திற்குள் சென்றவுடன் சுவாமிகளுடன் வந்தவர்கள் திருப்பனந்தாள் வடக்கு எல்லையில் பல்லக்கு விட்டு இறங்கி தென் எல்லை வந்தவுடன் மீண்டும் ஏறிய காரணத்தை அறிய விரும்பி பணிவுடன் கேட்டார்கள்.
"திருப்பனந்தாளில் சைவ மடம் உள்ளது. ஒரு மடாதிபதி உள்ள ஊரில் நாம் பல்லக்கில் பவனி வருவது உசிதமல்ல என்று நினைத்தேன். எனவேதான் இறங்கி, ஊர் தாண்டியதும் பல்லக்கில் மீண்டும் ஏறிக் கொண்டேன்" என்று விளக்கமளித்தார் ஸ்வாமிகள். காஞ்சி காமகோடி பீடத்தின் மகா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளுரையைக் கேட்டவுடன் அவரது பண்பினை எண்ணி அனைவரும் வியந்தனர்...

No comments:

Post a Comment