அன்றே சொன்னார் அம்பேத்கர்..! இன்று நிறைவேற்றினார் அமித்ஷா..!!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த இந்திய சாசன 370 மற்றும் 35A பிரிவுகள் நீக்கப்பட்டு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசமாக செயல்படும் என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார் ! இது வரவேற்கதக்க செயலாகும்.
1947-ம் ஆண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காலத்திலிருந்தே 370-ம் சாசனம் குறித்து ஆதரவு மற்றும் எதிர்க்கருத்துக்களும் இருந்துவருகின்றன. 1947-ம் ஆண்டு காஷ்மீரை ஆண்டு வந்த ராஜா ஹரிசிங் அவர்கள் பாகிஸ்தான் படையெடுப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்திய உதவியை நாடினார், இந்தியாவும் உதவிக்கரம் நீட்டியது. அவரது ஆட்சியின் கீழ் இருந்த காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்பொழுது வழங்கபட்டதுதான் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ஆகும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 370 மற்றும் 35A தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிய அன்றைய மத்திய சட்ட அமைச்சரும், அரசியல் சாசன தளகர்த்தருமான அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மறுத்து விட்டார். காஷ்மீருக்கு கொடுக்கப்படும் சிறப்பு அந்தஸ்து எதிர்காலத்தில் பல தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுட்டி காட்டியிருந்தார். அன்றைய பிரதமர் நேரு அவர்கள் தலையிட்டதால் அது வேறுவிதமாக நிறைவேற்றப்பட்டது.
காஷ்மீருக்கு 370 - சரத்தின் கீழ் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் ’’TEMPORARY, TRANSIENT ’’ என்று தான் சொல்கிறது. எனவே, தற்காலிகமாக மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த அந்த சிறப்பு அந்தஸ்து தற்பொழுது நீக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இதில் ஜனநாயக நெறிமுறை மீறல் அல்லது வாக்குறுதி மீறல் என்று எதுவுமில்லை.!! இந்திய அரசியல் சாசனத்தின் படி, இந்தியாவில் குடியுரிமை பெற்றவர் எவரும் இந்தியாவின் எந்த பகுதிக்கும், சுதந்திரமாக செல்லலாம், கல்வி கற்கலாம், தொழில் செய்யலாம், பூமி வாங்கலாம், விற்கலாம். ஆனால் இந்த பொதுவிதி காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாமல் இதுவரை இருந்து வந்தது. 370 மற்றும் 35A என்ற சிறப்பு அந்தஸ்து காரணமாக காஷ்மீரில் பிறந்த காஷ்மிரியைத் தவிர, இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்தவரும் அங்கு சொத்துக்கள் வாங்கவோ அல்லது தொழில் தொடங்கவோ இயலாது. கல்விக் கூடங்களில் கூட வேறு மாநிலத்தவர் பயில இயலாது!! மேலும், அம்மாநில பெண்கள் வேறு மாநில இளைஞரை திருமணம் செய்து கொண்டால் அப்பெண் காஷ்மீர் குடியுரிமையை இழக்க நேரிடும். இதுபோன்ற பல முக்கியமான சிறப்பு சலுகைகள் அம்மாநிலத்தவருக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்தன. 370 மற்றும் 35A சிறப்பு அந்தஸ்து சாசன விதிகள் இன்று இந்திய நாடாளுமன்றத்தில் நீக்கப்பட்டுவிட்டதால் காஷ்மீர் இந்தியாவின் முழுஅங்கமாகிவிடுகிறது.
காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவது குறித்து தொடர்ந்து பல வருடங்களாக விவாதம் நடைபெற்று வந்தது. ½ நூற்றாண்டு போராட்டத்தை தொடர்ந்து இன்றைய மோடி அரசு எடுத்த நடவடிக்கை மிகவும் துணிச்சலான செயலாகும். புதிய தமிழகம் கட்சி இதை மனதார வரவேற்கிறது. இந்தியாவில் காஷ்மீருக்கு மட்டும் கொடுக்கபட்டுவந்த சிறப்பு அந்தஸ்து பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கசப்புத்தன்மையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், காஷ்மீரை உதாரணம் காட்டி பல்வேறு மாநிலத்தவரும் சிறப்பு அந்தஸ்து அல்லது பிரிவினை கேட்கும் எண்ணங்கள் தோன்றியது.
எனவே, இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பிரிவினை எண்ணங்கள் தலைதூக்க முடியாது. குறிப்பாக தமிழ், திராவிடம் எனும் பெயரால் பிரிவினை எண்ணங்களை விதைத்து வருவோர்க்கு இது மிகவும் கடும் எச்சரிக்கையாகும்.
பின்குறிப்பு :
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, காஷ்மீரிகளுக்கும், இந்திய தேசத்திற்கும் விளைவித்த கேடுகளும் அதற்கான காரணிகளும், 370 பிரிவை நீக்க வேண்டியதன் அவசர அவசியம் குறித்தும் ஓரிரு நாளில் விரிவான கட்டுரை எழுத உள்ளேன்.
எனவே, இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பிரிவினை எண்ணங்கள் தலைதூக்க முடியாது. குறிப்பாக தமிழ், திராவிடம் எனும் பெயரால் பிரிவினை எண்ணங்களை விதைத்து வருவோர்க்கு இது மிகவும் கடும் எச்சரிக்கையாகும்.
பின்குறிப்பு :
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, காஷ்மீரிகளுக்கும், இந்திய தேசத்திற்கும் விளைவித்த கேடுகளும் அதற்கான காரணிகளும், 370 பிரிவை நீக்க வேண்டியதன் அவசர அவசியம் குறித்தும் ஓரிரு நாளில் விரிவான கட்டுரை எழுத உள்ளேன்.
No comments:
Post a Comment