Monday, July 29, 2019

முருகன் மற்றும் சுப்பிரமணிய ஸ்வாமி ஒன்றா ?வெவ்வேறா?

முருகனும் ஸுப்ரமண்யரும் ஒருவரே!
சுகி .சிவத்தின் கருத்துக்கு மறுப்புரை
- சந்த்ரு ராஜமூர்த்தி @ vaidika saivan

“தமிழர் வழிபட்ட முருகனும் வடநாட்டில் வழிபடப்பட்ட ஸுப்ரஹ்மண்யரும் இரு வேறு கடவுளர்கள்.பிற்காலத்தில் ஒருவராக ஆக்கப்பட்டனர்” என்ற கருத்தை  “சொல்வேந்தர்” சுகி.சிவம் முன்வைத்திருக்கிறார்.
நடுநிலையான மனப்பாங்குடன்,
தமிழரின் மிக தொன்மையான சங்க இலக்கியங்கில் குறிப்பிடப்பட்டுள்ள முருகனின் தொன்மங்களை வடமொழி நூல்களில் உள்ள ஸுப்ரஹ்மண்யரின் சரிதங்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் இவரின் கூற்று உண்மையா அல்லது பட்டவர்த்தமான புளுகா என்பது புலப்படும்.

தமிழரின் தனிக்கடவுளான முருகனின் திருவவதார வரலாறு பரிபாடலில் விரிவாகப் பேசப்படுகிறது:

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்

பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்

உமையடு புணர்ந்து, காம வதுவையுள்,

அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி

இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு, 30

‘விலங்கு‘ என, விண்னோர் வேள்வி முதல்வன்

விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது

அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,

எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு

திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள; 35

கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை

நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,

வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,

‘மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,

சாலார்; தானே தரிக்க என, அவர் அவி 40

உடன் பெய்தோரே, அழல் வேட்டு; அவ் அவித்

தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,

வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்

கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,

அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்; 45

மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்

நிறைவயின் வழா அது நிற் சூலினரே;

நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்

பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்;

பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, 50

ஈசனுக்கும் உமைக்கும் பிறக்கும் குழந்தை,  பேராற்றல் மிக்கதாக விளங்கக்கூடும் என்பதனை  உணர்ந்த இந்திரன் ஈசனிடம் வேண்ட,ஈசனும் அந்தக்  கருவை நீக்கி,அது ஆறு பாகங்களாக பிரிக்கப்பட்டு ரிஷிகளின் மூலம்,அருந்ததியைத்  தவிர்த்த ஆறு ரிஷிபத்னிகளின் கர்ப்பத்தில் செலுத்தப்படுகிறது.அவர்கள் இமயமலையிலுள்ள சரவணப் பொய்கையில் தாமரைப் பூவாகிய பாயலில் குழந்தையை ஈன்றனர்.பிறந்த குழந்தையை அழிக்க எண்ணி இந்திரன் வஜ்ரத்தால் தாக்கியபோது ஆறு குழந்தைகளும் ஓர் உருவாயின.

ஈசனுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையின் பேராற்றலை எண்ணி அச்சங்கொண்டு ,இந்திராதி தேவர்கள் பரமேஸ்வரனிடம் அவர் தேஜஸை வெளிப்படுத்தாமல் தன்னுளேயே  நிலைபெறச் செய்யுமாறு தேவர்கள் வேண்டிய வரலாறு வால்மீகி ராமாயணத்தின் பால கண்டத்தின் 36 வது சர்க்கத்தில் உள்ளது:

அபிகம்ய ஸுரா: ஸர்வே ப்ரணிபத்ய இதம் அப்ருவன் |
தேவ தேவ மஹாதேவ லோகஸ்ய அஸ்ய ஹிதே ரத ||
ஸுராணாம் ப்ரணிபாடென ப்ரஸாதம் கர்த்தும் அர்ஹஸி |
ந லோகா தாரயிஷ்யந்தி தவ தேஜ: ஸுரோத்தம|
ப்ராஹ்மேண தபஸா யுக்தோ தேவ்யா ஸஹ தப: சர ||
த்ரைலோக்ய ஹித காமார்த்தம் தேஜ: தேஜஸி தாரய|
ரக்ஷா ஸர்வான் இமான் லோகான் ந அலோகம் கர்த்தும் அர்ஹஸி || 1.36.8-11

இந்த வரலாறு மஹாபாரதத்தின் அனுஷாசன பர்வத்தின் 84 வது அத்தியாயத்திலும் உள்ளது.

ரிஷிபத்னிகள் சிவ தேஜஸை பெற்றுக்கொள்ளும் செய்தி ஸ்கந்த புராணத்தின் மஹேஸ்வர கண்டத்தின் கௌமாரிக கண்டத்தின் 29 வது
அத்தியாயத்தில் உள்ளது.ஸ்கந்த ஜனனத்தில் அருந்ததியை   தவிர்த்த ஆறு ரிஷிபத்தினிகளின் சம்பந்தம் இருக்கும் குறிப்பு மஹாபாரதத்தின் வன பர்வத்தின் 223 வது அத்தியாயத்தில் உள்ளது.இந்திரனுடன் முருகன் போர் புரிந்த வரலாறு வன பர்வத்தின் 226 வது அத்தியாயத்தில் உள்ளது.

அக்னிதேவன் இந்திரனை வென்ற முருகனுக்கு,  கொடியாக திகழ்வதற்காக ஒரு கோழிச்சேவலைப் பரிசளித்தான் என்று பரிபாடல் தரும் குறிப்பு (அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,செல்வ வாரணம் கொடுத்தோன்) மஹாபாரதத்தின் வன பர்வத்தின் 228 வது அத்தியாயத்தில் உள்ளது.

தேவர்கள் கந்தனுக்கு பலவித பரிசுகளை அளித்த வரலாறு ஸ்கந்த புராணம்(1.2.30),மத்ஸ்ய புராணம்(2.3),ப்ரஹ்மாண்ட புராணம்(5.1.3),வாயு புராணம்(3.3.10) முதலிய புராணங்களில் காணப்படுகின்றது.

பரிபாடல்(8.29,19.29,19.26,102-103) மற்றும் திருமுருகாற்றுப்படையில்(266) குறிப்பிடப்பட்டுள்ள கந்தன் க்ரௌஞ்சமலையை பிளந்த வரலாறு மஹாபாரதம் ( வன பர்வம்),வாமன புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தில் உள்ளது.

புறநானுறு (23.3-7) ,பதிற்றுப்பத்து (11.56) ,பெரும்பாணாற்றுப்படை (456-460), குறுந்தொகை (1:2) ,கலித்தொகை (27:15-16;96:25-27) ,பரிபாடல் (1:5,8:70, 14:18, 18:3-4, 19.101) முதலியவற்றில் முருகன் சூரனை வென்ற குறிப்பு உள்ளது.சூரனுடன் முருகன் புரிந்த போர் மிக விரிவாக வடமொழி ஸ்கந்த புராணத்தின் சிவரஹஸ்யகண்டத்தின் யுத்த காண்டத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.சூரன் மற்றும் அவனது தம்பியரின் வரலாறுகள் அதே புராணத்தின் அசுர காண்டத்தில் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது.

பரிபாடலில் வரும்  இந்த வரலாறு வால்மீகி ராமாயணம் மற்றும் மஹாபாரதத்தில் வரும் ஸ்கந்தனின் சரிதையை அடிப்டையாகக் கொண்டே  பாடப்பெற்றுள்ளது என்று சந்தேகமின்றி நிரூபணமாகிறது.

“ஸுப்ரஹ்மண்யன் என்றால் ப்ராஹ்மண தர்மத்தை விசேஷமாக ரக்ஷிக்கின்றவன் என்று
பொருள். அவர் எப்படி தமிழ் கடவுளாக இருப்பாரு?எப்படி குறத்தியை கல்யாணம் பண்ணிக்குவாரு?”என்று கேள்வி எழுப்புகிறார்.
இவர் மட்டும் அல்ல.ஆராய்ச்சியாளர்கள் என்றப் பெயரில் உள்ள பலரும் வள்ளியை முருகன் மணந்த வரலாறு தமிழ் நூல்களில் மட்டும்தான் உள்ளது,அது தமிழரின் மரபு வழி வந்த ஒரு கதையன்றி வடமொழி புராணங்களில் வள்ளி என்ற கதாபாத்திரமே இல்லை என்று முடிவுகட்டிவிடுகிறார்கள்.அது முற்றிலும் தவறு.

வடமொழியில் வியாசர் இயற்றிய பதினெட்டு மஹாபுராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தின் சிவரஹஸ்யகண்டத்தில் தேவ காண்டத்தில் 3 வது அத்தியாயத்தில்வள்ளியின் பிறப்பு,அவள் நம்பிராஜனால் வளர்க்கப்படுதல்,ஸ்கந்தன் வேடனாகவும் விருத்தனாகவும் வந்து அவளை ஆட்கொள்ளுதல் முதலிய அனைத்து வரலாறுகளும் விஸ்தாரமாக விவரிக்கப்பட்டுள்ளன.

வ்யாதவேஷம் க்ருஹீத்வாத நிரகாத் ஷண்முகஸ் ததா |
சமாகத்ய ஜவேநாயம் லவலீ நாயிகாந்திகம் ||
காத்வம் பாலே சுதா கஸ்ய கிந்நாமதே க்வவா
ஜநி : |  40-41

அப்பொழுது ஸ்ரீ ஷண்முகரும் வேட வடிவம் தரித்து வேகமாய் வள்ளியின் சமீபம் சென்று,”ஓ குழந்தாய் நீ யார் ? யாருடைய பெண்?உன் பெயர் என்ன? நீ எங்கு பிறந்தாய்?”என்று பலவாறாக வினவினார்.

ததாநீம் ஷண்முகோ ஜ்யேஷ்டம் கஜ வக்த்ரமசிந்தயத் |
சது கந்த த்விபாகார: மஹாவேகென நிர்யயௌ||
தம் த்ருஷ்ட்வா கஜமல்லம்ஸா பீத பீதா மஹாஜவாத் |
ஆகத்ய வ்ருத்தமாலிங்கிய த்வதுக்தம் தச்ருணோம்யஹம் || 74-75

அந்த சமயத்தில் ஷண்முகரானவர் தன் தமையனாகிய கணபதியை நினைத்தார்.கணேசரும் மதங்கொண்ட யானையின் வடிவோடு அந்த இடத்திற்கு மிகவும்
வேகமாக வந்தார்.வள்ளியானவள் அந்த யானையைக் கண்டு மிகவும் பயம்கொண்டு மிக வேகமாக ஓடிவந்து  கிழவரைக் கட்டிக்கொண்டாள்,”நான் தாங்கள் சொல்வதை கேட்கிறேன்!” என்றாள்.

இந்த வடமொழி ஸ்கந்த புராணத்தின் ஒரு பகுதியைத் தான் கச்சியப்பர் தமிழில் கந்த புராணம் என்று பாடினார்.

தமிழ் இலக்கியங்களில் கூறப்படும்  முருகனின் அனைத்து தொன்மங்களும் வடமொழி  நூல்களிலும் காணப்படுகின்றன.வடமொழிநூல்களில் கூறப்படாத தனித்துவமான வரலாறோ குணாதிசயமோ முருகனுக்குத்  தமிழ் இலக்கியங்களில் எங்குமே கூறப்படவில்லை.

இவற்றிலிருந்து, பண்டையத் தமிழர்கள் வழிபட்ட குறிஞ்சி நிலக் கடவுளான சேயோன் முருகனும் வடமொழி நூல்கள் போற்றும் ஸுப்ரமண்யரும் ஒருவரே என்பது கையிலங்கு கனிபோல் தெள்ளத் தெளிவாக புலனாகிறது.
read watch and share to others

Sunday, July 28, 2019

கர்மவினை தீர சுலபவழி

*கர்ம வினைகளால் அவதிப்படுகிறீர்களா?*
*கர்மவினைகளை தீர்க்கும் தானங்களும் அவற்றின் வகைகளும்.*

🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

*பகிர்வு*

~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

*அன்னதானம் செய்தால்:*

பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். 

*ஆடைதானம் செய்தால்:*

தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும். 

*காலணி தானம்:*

பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும். 

*மாங்கல்ய தானம்:*

காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும் . 

*குடை தானம்:*

தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும். 

*பாய் தானம்:*

பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும்.  கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும் . 

*பசு தானம்:*

இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும். 

*பழங்கள் தானம்:*

பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும். 

*காய்கறிகள் தானம்:*

பித்ரு சாபங்கள் விலகும் . குழந்தைகளின் ஆரோக்யம் வளரும். 

*அரிசி தானம்:*

பிறருக்கு ஒன்றுமே தராமல் தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும். 

*எண்ணெய் தானம்:*

நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும் .கடன்கள் குறையும். 

*பூ தானம்:*

அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும் , சாந்தமாகவும் அமையும். 

*பொன் மாங்கல்யம் தானம்:*

மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும் .

 
மேலும் நமக்கு பயன்படாத, மற்றவருக்கு பயன்படும் பொருட்கள் எதுவாகினும் தானம் கொடுக்கலாம், மற்றவர் கேட்டு கொடுப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு அப்பொருள் கண்டிப்பாக தேவைப்படும் என்பதை அறிந்து நாமே அவர்களுக்கு கொடுப்பது இன்னும் பலன்களை அதிகரிக்கச் செய்யும்.

🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

*பகிர்வு*

~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

Friday, July 26, 2019

வரலக்ஷ்மி வ்ரத பூஜா விதி முழுவிவரங்களுடன்

On 09/08/19....
#வரலட்சுமி_பூஜைக்கு தேவையான பொருட்கள்
#மண்டபத்திற்கு_அலங்காரபொருட்கள்.
1- சின்ன வாழைக்கன்று இரண்டு
2- தோரணம் (கிடைத்தால்)
3- மாவிலை தோரணத்திற்கு.
4- முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின்    பின் அலங்காரத்தை ரசிக்க)

5. பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு.
1- அம்மனை வைக்க சொம்பு.
2- காதோலை இரண்டு பக்கமும் வைக்க
3- கருக(கண்ணாடி) வளையல் இரண்டு பக்கமும் வைக்க
4- மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க
5-தாழம்பூ ( கிடைத்தால் அதை கருக வளையலில் சேர்த்து இரு பக்கமும் வைக்கலாம்)
6- ஜடை அலங்காரம் இப்போது (கூடாது செயற்கை அசுத்தமான முடிகள் நல்லது கிடையாது)
7- சொம்பிற்கேற்ப சிறிய தேங்காய்.
8- சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க
9- புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த)
#பூஜைக்கு_தேவையான_பொருட்கள்.
1- திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
2- பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு)
3- பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
4- மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
5- ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
6- மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
7- பஞ்ச பாத்திரம், உத்தரினி.
8- இழை(மா)க்கோலம் போட தேவையான பொருட்கள்
9- மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.
10- அர்க்கியம் விட கொஞ்சம் பால்
#நைவேத்தியங்கள்.
1-இட்லி
2- அப்பம்
3- வடை (உளுந்து வடை)
4-கொழுக்கட்டை
5-வெல்ல பாயசம்
6- கொத்துக்கடலை சுண்டல் (சாயந்திரம் நைவேத்தியத்திற்கு)
7- இதற்கு தேவையான தேங்காய், வெல்லம் மற்றும் தேவையான மளிகை சாமான்கள்
#பழ_வகைகள்
1- வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா பழங்களும்.
பூஜை முடிந்த பின், அர்க்கியம் விட்ட பிறகு, மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ளவும்.
மாலையில் அம்மனுக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து, கற்பூரம் ஆரத்தி எடுக்கவும்.
பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும்.
மறு நாள் காலை புனர்பூஜை செய்து, அம்மனை எடுத்து அரிசி பானையில் வைக்கவும்.
அம்மன் வைத்த அரிசியை, வரும் கிருஷ்ண ஜயந்தி பட்சணம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம்.
#விக்னேஸ்வர_பூஜை
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,
ஓம் அச்சுதாய நம:
ஃ ஓம் அனந்தாய நம:
ஃ ஓம் கோவிந்தாய நம:
என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.
கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி ஃ ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி ரூ என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.
இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.
ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.
அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்…
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூஸர்வதா||
- என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும். அடைப்புக் குறிக்குள்() இருப்பவை இந்த வருடத்துக்கான ( ) நாள் நட்சத்திரங்கள்…
சுபே சோபனே முஹ_ர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்ரூ தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதிரூ ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, ஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே, தெக்ஷ்ணாயனே கீர்ஷ்மருதௌ, கடகமாஸே, சுக்லபக்ஷே, துவாதஸ்யாம் சுபதிதௌ,ப்ருகு வாஸரயுக்தாயாம், மூலாநக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் துவாதஸ்யாம் சுப திதௌ,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யானரூஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே| ரூ
என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,
ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.
பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.
கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||
என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.
அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்மரூவிஷ்ணு ரூமஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம்ரூபீஜம், ஹ்ரீம்ரூசக்தி:, க்ரோம்ரூகீலகம்||
பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.
ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதிரூபாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
- இப்படி ப்ராண ப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.
கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.
பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|
வரலக்ஷ்ம்யை நம:|
என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.
பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸ_த்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹூலான் வரான்||
என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.
ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|
ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||
வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|
ரூ என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸ_த்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணிஃபனைஓலை அணிவிக்க)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)
பிறகு அங்க பூஜை செய்யவும்.
முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.
பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோத்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.
ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்யபுஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:
ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோதஸம்பவாயை நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
ஓம் புத்தயே நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோகசோக விநாசின்யை நம:
ஓம் தர்மநிலயாயை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பத்மோத்பவாயை நம:
ஓம் பத்மமுக்யை நம:
ஓம் பத்மநாபப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்மமாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பத்மின்யை நம:
ஓம் பத்மகந்தின்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ரவதனாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப்புஜாயை நம:
ஓம் சந்த்ரரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்துசீதளாயை நம:
ஓம் ஆஹ்லாதரூஜனன்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்வஜனன்யை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்யரூநாசின்யை நம:
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வநிலயாயை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் யசஸ்வின்யை நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் உதாராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் தனதான்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸ்த்ரைண ஸெளம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
ஓம் வரலக்ஷ்ம்யை நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ரதனயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்களாதேவ்யை நம:
ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவரூவாரிண்யை நம:
ஓம் நவதுர்காயை நம:
ஓம் மஹாகால்யை நம:
ஓம் ப்ரஹ்மவிஷ்ணுரூ சிவாத்மிகாயை நம:
ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்.

Sunday, July 14, 2019

கலியுகத்தில் என்னவெல்லாம் நடக்கும்

*கலியுகத்தில்" என்னென்ன நடைபெறும் என்பதை விளக்கமாக கூறிய ஸ்ரீ கிருஷ்ணர*்

பகவான் கிருஷ்ணரிடம் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்ற கேள்வியை கேட்டனர்...

அதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்..." என்று கூறி... தனது வில்லில் இருந்து நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான்... அங்கு ஐந்து கிணறுகள் இருநதன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள்.

சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவை மிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறு மட்டும் நீர் வற்றி இருந்தது...

இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடநதான்.

அர்ஜூனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரலைக் கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்தான் அர்ஜூனன், அங்கு ஒரு கோரமான காட்சியை கண்டான்...

அந்தக் குயில் ஒரு வெண்முயலை கொத்தித் தின்று கொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்துக் கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதே என்று எண்ணியபடி, குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சி கண்டான்.

பசு ஒன்று அழகிய கன்றுகுட்டியை ஈன்றெடுத்து, அதனைத் தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய்ப் பசு நாவால் வருடுவதை நிறுத்தவில்லை இதனால் கன்றுக்கு சிறிய காயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதனை தடுக்க சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அதனால் அந்தக் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது.

'தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?' என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அடுத்ததாக நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக் கொண்டு திரும்பினான்.

அப்போது...

மலை மேலிருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருந்த அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்துத் தள்ளி, வேகமாக உருண்டு வந்தது.

அவ்வாறு வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது.

ஆச்சர்யத்தோடு அதைக் கண்ட நகுலன் தெளிவு பெற பகவானை நோக்கி புறப்பட்டான்.

இவ்வாறு பாண்டவர்கள் நால்வரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர்.

அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும் ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கூறி, அதற்கான விளக்கத்தை கேட்டனர்.

கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்...

"பீமா...! கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் அருகருகே தான் வாழ்வார்கள்... ஆனால், செல்வந்தர்கள் மிகவும் செழிப்பாக இருந்தாலும்,  தம்மிடம் உள்ளதில் ஒரு சிறு பகுதியைக் கூட ஏழைகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்...

ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்குநாள் செல்வந்தர்களாகவே ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழ்மையில் வாடி வருந்துவார்கள்...

நிரம்பி வழியும் நான்கு  கிணறுகளுக்கு நடுவில் உள்ள வற்றிய கிணற்றை போல்..." என்றார்.

பின்னர் அர்ஜூனனிடம் திரும்பி, கிருஷ்ணர்,

"அர்ஜூனா! கலியுகத்தில் போலி ஆசிரியர்கள், மத குருக்கள்,  போன்றவர்கள் இனிமையாகப் பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்...

இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கயவர்களாகவே இருப்பார்கள்...

இனிய குரலில் பாடிக்கொண்டே, முயலை கொத்தித் தின்ற குயிலைப்போல...!" என்றார்.

தொடர்ந்து சகாதேவனிடம் கிருஷ்ணர், "சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாக இருப்பார்கள்..

இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை கூட மறந்து விடுவார்கள்...

இதையடுத்து, பிள்ளைகளும் வருங்காலத்தில் தீய வினைகளால் துன்பத்தை அனுபவிப்பார்கள்.

இவ்வாறு, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்...

கன்று குட்டியை நாவால் நக்கியே காயப்படுத்திய பசுவைப் போல்..."

அடுத்ததாக, நகுலனை பார்த்த கிருஷ்ணர்,

"நகுலா...! கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நற்சொற்களைப் கேளாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும், நற்குணத்தினின்றும்,

நன்னெறிகளிலிருந்தும் நீங்குவார்கள்...

யார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்...

எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள்...

இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்தி, நிதானப்படுத்தி நன்னெறியுடன் செயல்படுத்த முடியும்...

மரங்களாலே தடுத்து நிறுத்த முடியாத பெரிய பாறையை...

தடுத்து நிறுத்திய சிறு செடியைப் போல...!" என்று கூறி முடித்தார் பகவான் கிருஷ்ணர்.

இன்றைய கலியுகத்தில் தற்போது கிருஷ்ணர் கூறியபடித்தான் நடந்துகொண்டிருக்கிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே சமயத்தில் இதற்கு தீர்வாகவும் இறைவனை சரணடைவதை தவிர வேறு எந்த தீர்வும் நமக்குக் கைகொடுக்காது என்தையும் கிருஷ்ணர் தெளிவாக கூறியுள்ளார்.. எனவே இந்த கலியுகத்தில் நாமும் ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுத்து இறையருள் பெறுவோம்.