Thursday, February 28, 2019

போர் காலங்களில் பொதுஜனங்கள் என்ன செய்ய வேண்டும்

*இந்தியா-பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவும் இவ்வேளையில் நாம் கவனிக்க வேண்டியவை*

*(1) நமது விமானப்படை புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது, பாகிஸ்தான் பொதுமக்களையோ, இராணுவத்தையோ தாக்கவில்லை.*

*(2) ஆனால் பாகிஸ்தான் அமெரிக்கா கொடுத்த F-16 விமானத்தைக் கொண்டு காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவ முகாமை தாக்க முயற்சி செய்த போது நமது இராணுவத்தால் சூட்டு வீழ்த்தப்பட்டது.*

*(3) பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட MIG-21 ரக விமானம் துரதிஷ்டவசமாக  விபத்துக்குள்ளாகியது. பைலட் அபினந்தனை பாகிஸ்தான் இராணுவம் பிடித்து வைத்துள்ளது.*

*(4) முதலில் இந்திய இராணுவ தாக்குதலை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான், வரிசையாக பொய்களை சொன்னது. தற்போது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடந்த தாக்குதலை ஏற்றுக்கொண்டுள்ளது.*

*(5) பாகிஸ்தான் இராணுவ தரப்பிலும், ( DG ISPR ) இம்ரான் கானும் இரண்டு இந்திய விமானங்களை சுட்டதாக பேட்டியளித்தனர். இந்திய வெளியுறவுத் துறை செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பிறகு மாலையில்  ஒரு விமானத்தை தான் சுட்டோம் எனக் கூறியுள்ளனர்.*

*(6) தங்களது திட்டங்கள் ஒவ்வொன்றும் தோல்வியடைவது ஒருபுறம், மறுபுறம் உலக நாடுகளின் ஆதரவற்ற நிலையால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இம்ரான்கான் வலிக்காத மாதிரியே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். இரண்டாம் உலகப்போர், வியட்நாம் போர், அமெரிக்க-ஆப்கானிஸ்தான் போர்களை மேற்கோள் காட்டி பேச்சுவார்த்தைக்கு தயார் என பாசாங்கு காட்டியுள்ளார்.*

*(7) இந்திய அரசோ, இராணுவமோ அதிகார்வப்பூர்வமாக MIG-21 விமானம் மற்றும் பைலட் அபினந்தனைப் பற்றி சொல்வதற்கு முன்பே, பாகிஸ்தான் இராணுவத்தினரும்,  பயங்கரவாதிகளும் twitter, facebook ல் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்களை உடனே வெளியிட்டன தமிழக ஊடகங்கள்.*

*(8) அல்லாஹூ அக்பர் என கத்திக் கொண்டு அபினந்தனை கண்மூடித்தனமாக அடித்ததைக் கொண்டாடிய காஷ்மீர் பிரிவினைவாதிகளும், அரபு நாடுகளில் வேலை செய்து நல்ல வருமானம் ஈட்டும் இந்திய முஸ்லிம்களும் Social Media க்களில் இந்திய இராணுவத்தையும், பிரதமர் மோடியையும் தரக்குரைவாக விமர்சித்து எழுதுவதை இங்குள்ள மோடி வெறுப்பு கும்பல்களும் அவர்களுக்கு ஆதரவாக பதிவிட்டு தங்களது அரிப்புகளை தீர்த்துக் கொள்கின்றனர்.*

*(9) நடப்பது இராணுவ யுத்தம் மட்டுமல்ல. நிழல் யுத்தம், உளவியல் ( phychological ) ரீதியான யுத்தம். பொய் செய்திகளையும், வதந்திகளையும் பரவ விடுவது. நமது நாட்டு மக்களையே ஒருவரை ஒருவர் சண்டையிட வைத்து, நமது மக்கள் மற்றும் இராணுவத்தின் மனோபலத்தை குறைக்க செய்யும் யுக்திகள் நடக்கின்றன.*

*(10) சில பேர் "போர் கூடாது" என முழக்கமிடுகின்றனர். 1947 லில் இருந்து பாகிஸ்தானால்  இந்திய நாடு பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை இழந்துள்ளது. நாம் எப்போதுமே போரை விரும்பியது இல்லை. ஆனாலும் 1948, 1965, 1971மற்றும் 1999 களில் பாகிஸ்தான் நம் மீது போரை திணித்தது. அப்போர்களில் மரண அடி வாங்கிய பாகிஸ்தான் இன்று பயங்கரவாதிகளை ஏவி  நிழல் யுத்தம் செய்கிறது .*

*(11) கடந்த 72 ஆண்டுகளாக காஷ்மீரை அபகரிக்கவே பாகிஸ்தான் துடிக்கிறது. கிட்டத்தட்ட 76000 சதுர மைல் பரப்பளவுள்ள காஷ்மீர் பகுதியை (POK) இழந்தது போதும்.  இனியும் ஓரடி நிலத்தையும் நாம் விட்டுக்கொடுக்க நாம் அனுமதிக்கக்கூடாது.*

*(12) மத்திய அரசு பாகிஸ்தானின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் புல்லுருவிகளையும், இராணுவத்தை அவமதித்து பேசும் கயவர்களையும் ஈவு, இரக்கமில்லாமல் சு.......*

*(13) தற்போதைய தேவை அனைவரும் இந்தியர் என்ற ஒரே குரலாக இந்திய இராணுவத்திற்கும், மத்திய அரசிற்கும்  உறுதுணையாக இருப்பது ஒன்றே.*

Wednesday, February 27, 2019

எவ்வளவு தான் நல்லது செய்து கொண்டு வந்தாலும் மனதில் பாரம் குறையலையே என வவியா?

புண்ணியம் என்பது என்ன?

நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது.

மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான்.

அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.

ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.

உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.

இது தான் புண்ணியம்.

மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள்.

உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள்.

உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள்.

இறைவனை துணைக்கு அழையுங்கள்.

மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள்.

தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள்.

அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்.

உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்.

இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன?

ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.

சரி,இதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது என்பதை பார்ப்போம்.

இதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதுமிக எளிது.

தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை.

எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள்.

நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள்.

நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள்.

அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடையஇறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.

யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம்பெற எண்ணிக்கொள்ளுங்கள்.

மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள்.

தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள்.

அந்த மரத்தை வெட்டியவர் மேலும் சில மரங்களை நடட்டும் என்று.

வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று.

உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள்.

ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் செய்ய முடியும்.

இந்த எண்ணங்களுக்காக நீங்கள் பணமாக செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை.

ஆனால் இதன்மூலம் கிடைப்பதோ மிகப் பெரியபுண்ணியம்.

எனவே புண்ணியம் செய்ய எதுவும் பணம் ஏதும் தேவையில்லை ,நல்ல எண்ணங்களுடன் கூடிய நல்ல செயல்கள் உடன் கூடிய  மனம்இருந்தால் போதும்.

பிசினஸ் வ்யாபாரம் தொழில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ணவர்களுக்காக

ஜாதகத்தில் வியாபாரம்

இன்று மக்கட் சமூகத்தில் பெரும்பாலோர் வியாபாரம் செய்வதிலேயே அதிக நாட்டம் செலுத்துகின்றனர். அரச உத்தியோகத்தார், செல்வந்தர், பாமரர் ஆகிய பலதிறத்தினரும் வியாபாரத்தை முழுநேர உழைப்பாகவோ அல்லது பகுதி நேர உழைப்பாகவோ அல்லது பகுதி நேர உழைப்பாகவோ கருதிச் செயற்படுகின்றனர். ஆனால் எல்லோரும் இத்துறையில் வெற்றி பெறுவர் எனத்துணியவியலாது.  இவர் வியாராத்தில் முனைப்போடு ஈடுபட்டுப் பெருநிதி ஈட்டவும் பலர் எதிர் பாராத வகையில் முதல் இழந்து பலவகை கஷ்டங்களையும் எதிர் நோக்குகின்றனர். இதற்கு காரணம் ஜாதகத்தில் வியாபாரத்தை குறிக்கும் கிரக நிலைகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திருப்பதுதான்.  ஆதலால் வியாபார தொழிலில் ஈடுபட விரும்புவோர் முதற்கண் தமது ஜாதகத்தை சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். அதாவது ஜாதகத்தில் அத்தைகைய தொழில் முயற்சிக்குப் பயன் உண்டா? இல்லையா? என்பதைத் தீர்மானித்துக் கொள்வது அவசிய கடமையாகும்.

வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற ஜாதகத்தில் இலக்கினம், சந்திரன், சூரியன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்கள் பலம் பொருந்தி இருக்க வேண்டும். அன்றியும் 2,4,7,10,11,12-ம் இடங்களின் பலமும் அவசியம் வேண்டற்பாலதாகும். இவற்றை இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

இலக்கினம்:
ஜாதகத்தில் இலக்கினம் முக்கிய இடத்தை வகிப்பது நாம் அறிந்ததேயாம் கட்டைவிரல் போன்று இலக்கினம் பிரதான இடத்தை வகிக்கின்றது. (ரோமர் இனத்தவர்கள் கட்டைவிரல்க் கொண்டே கைரேகைப்பலன் அறிவார்களாம்.) இலக்கினம் என்னுமிடத்து இலக்கினாதிபனின் இருப்பு, ஆதிபத்தியம், உறவு, திருஷ்டி, பார்வை, நோக்கு, அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும். வியாபாரம் ஸ்திரமாக உறுதியாக அமைவதற்க்கு இலக்கினம் பலம் பொருந்தி இருப்பது அவசியம் ஆகும்.

சந்திரன்:

இலக்கினத்துக்கு அடுத்தபடியாகச் சந்திரனின் பலாபலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். சந்திரன் மனோகாரகன் ஆதலால் சந்திரனின் நிலைமையைக்கொண்டு வியாபாரம் நடத்துபவனின் மனப்பாங்கை மனோநிலை அறியலாம். மனஉறுதி இல்லாவிடத்து வியாபாரத்தில் செய் தொழிலில் உயர்ச்சி காணவியலாது. பொது ஜன அபிமானம் ஆதரவைப் பெறுவதற்க்கும் மனம் நல்ல முறையில் அமைந்திருப்பது அவசியமாகும். ஆதலால் சந்திரன் வியாபாரத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறார் என்பது நன்கு தெளிவாகும். இவர் தானியங்களுள் நெல், அரிசி, ஆகியவற்றையும் நவரத்தினங்களுள் முத்தையும், உலோகவர்க்கங்களுள் செம்பையும் காரகத்துவமாக உடையவராவார் மற்றும் துணிவகைகள் நீர்ப்பண்டங்கள்(watery goods) மட்பாண்டங்கள் ஆகியனவும் இவரது ஆதிக்கத்துக்குட்பட்டவையாம். ஆதலால் இவற்றைக் கிரய விக்கிரயஞ் செய்யும் வியாபாரிகளுக்குச் சந்திரன் பலமாக இருக்க வேண்டும்.

சூரியன்:
இவர் சக்தி, மனிதவலு இரண்டுக்கும் காரகத்துவம் பெற்றவர். வியாபாரம் முதலிய சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்வோர்க்குச் சக்தியும், வலுவும் வேண்டற்பாலனவாகும். இன்னும் சூரியன் இராஜக்கிரகம் ஆகும். ஆதலால் வியாபாரிகளாகவுள்ளோர் அரசாங்க உதவி தொடர்பு என்பனவற்றைப் பெறுவதற்க்கு ஜாதகத்தில் சூரியன் பலவானாக இருப்பது அவசியமாகும். மற்றும் துணிவு, தைரியம்,அந்தஸ்து, கௌரவம், அதிகாரம் என்பனவற்றுக்கும் இவரே பொறுப்பாவார். எனவே சூரியனின் பலம் வியாபாரி ஒருவருக்கு வேண்டற்பாலதாகும் என்பது தெளிவாகும் இவர் உலோக வர்கங்களுள் பொன்னையும், நவரத்தினங்களுள் மாணிக்கத்தையும், துணிகளுள் கம்பளி,பட்டு, என்பனவற்றையும் மருந்து வகைகளையும் காரகதுவப்படுத்துவார். ஆதலால் இவற்றை வியாபாரப் பொருட்களாக கொண்டு ஆதாயம் பெற விரும்புவோர் ஜாதகத்தில் சூரியன் மிக்க பலவானாக இருப்பது அவசியம்.

புதன்:
இவர் தான் வியாபாரத்திகுக் காரகத்துவம் பெறும் முக்கியஸ்தர் சிறுவியாபாரி முதல் பெரும் வர்த்தகர் வரை உள்ள அனைவரது ஜாதகத்திலும் புதன் பலவானாக இருப்பார். அத்துடன் மனோசக்தி, மதிநுட்பம், திட்டமிடுதல், கணிதவிற்பனன் ஆகியவற்றைக் வழங்குபவராகவும் புதன் விளங்குகின்றார் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு இவ்வம்சங்கள் நிச்சயம் வேண்டற்பாலனவாகும். இவர் நவரத்தினங்களுல் நீலமணியையும் (sapphire) பஞ்சலோகங்களுள் பித்தளையையும் தமது ஆதிக்கத்துக்குட்படுத்துவார். இவற்றைக் கிரய விக்கிரஞ்செய்யும் வியாபாரிகட்கு ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது விரும்பத்தக்கதாகும். மேலும் வியாபாரத்திற்கு இன்றியமையாத வாக்குவன்மை, பேச்சுத்திறன் என்பனவற்றுக்கும் புதன் சுபத்துவம் பெறுதல் வேண்டும். சுருங்கக்கூறுமிடத்து விளம்பரத்திறன் சாமாத்காரமாகப் பேசும் இயல்பு ஆகியவற்றுக்குப் புதன் பொறுப்பாக இருப்பார் என்பதாம்.

சனி:
வியாபாரம் மட்டுமல்லாது அனைத்துத் தொழில்களுக்கும் உழைப்பும் முயற்சியும் தேவை இவை இரண்டிற்க்கும் காரகத்துவமாக இருப்பவர் சனி. எனவே ஒருவர் வியாபாரத்தில் உயர் நிலை அடைவதற்க்கு ஜாதக்தில் சனி பலமாக அமையவேண்டும் என்பது பெறப்படும். சனி பலவீனமாக இருந்தால் உழைப்பும் உறக்கமும் குன்றி முதலிழந்து நிற்க வேண்டிய அவலநிலைதான் ஏற்படும். மேலும் வியாபாரத்திற்கு இன்றியமையாத பொதுஜன ஆதரவு பிரபலம் ஆகியவற்றுக்கும் சனி காரணமாகிறார். ஆதலால் வியாபார முக்கியஸ்தர் ஒருவரின் ஜாதகத்தில் சனி பலம்பொருந்தி இருக்க வேண்டும் என்பது ஒரு தலைத்துணிப்பாகும். இவர் உழுந்து முதலிய கறுப்புத் தானியங்களையும், உலோகவர்கங்களுள் இரும்பையும் நவரத்தினங்களையும் காரகத்துவமாக உடையவர். ஜாதகத்தில் சனி ஆதிக்கம் பொருந்திக் காணப்படுமிடத்து இப்பொருட்களின் கிரய விக்கிரயங்களால் கூடிய ஆதாயம் பெற்றிடலாம்.

குரு:
இவர் தனக்காரகன் ஆவார். அதாவது வியாபாரத்திற்க்கு மிக இன்றியமையாத நிதிக்குக் காரகத்துவம் பெற்றார் என்பதாம். மேலும் வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய உண்மை, நேர்மை என்பனவற்றைப் பேணி நடக்க உதவுபவரும் இவரே ஆவார். ஜாதகத்தில் குரு பலவீனமாக அமையும் போது வியாபாரத்தில் கறுப்பு மார்க்கட், கலப்படம், மோசடி என்பன மேலோங்கி நிற்கும் இவர் உலோகவர்க்கங்களுள் தங்கத்தையும், நவரத்தினங்களுள் புஷ்பராகத்தையும் தானியங்களுள் பச்சைக்கடலையையும் காரகத்துவமாக உடையவர் இவற்றுடன் வங்கித் தொடர்பு வங்கிகணக்கு ஆகிய இரண்டும் இவரது பிரதான காரகத்துவங்களாக அமையும்.

இவற்றோடு ஜாதகத்தில் 2,4,7,10,11,12-ம் இடங்களின் பாலபலன்களையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

நீங்கள் கூட ஜ்யோதிஷராகலாம்

பாவ கட்டம் எவ்வாறு செயல்படும்?

இராசி கட்டம், நவாம்ச கட்டம் போன்று பாவ கட்டம் முதன்மையானது. இதை பலர் எடுக்காமல் பலன் சொல்கின்றனர்.

தசா புத்தி அந்தரம் இவை அணைத்தும் பாவ கட்டம் பொருத்தே செயல்படும்.
இராசி சக்கரத்தில் எந்த  யோகம் இருந்தாலும் அதே கிரக சேர்க்கை பாவக கட்டத்தில் இல்லை எனில் யோகத்தை தசா புத்தி வாயிலாக செயல்படுத்த இயலாது. அப்போது அந்த யோகத்தை அனுபவிக்க இயலாது.

உதாரணத்திற்கு இராசி கட்டத்தில் மகர லக்னத்தில் சந்திரன் செவ்வாயும் இணைவு இருப்பதாக கொள்வோம். இது சந்திர மங்கள யோகம். இதே சந்திரன் பாவக கட்டத்தில் 12ஆம் பாவமான தனுசு ராசியில் இருந்து செவ்வாய் லக்னத்தில் இருந்தால் சந்திர மங்கள யோகமாக தசா புத்தியில் செயல்படாது. மாறாக 12 ஆம் இடம் விரைய ஸ்தானம் என்பதால் சந்திரன் தசா புத்தி அந்தரங்களில் விரையாதிபதி போல் நடப்பார்.

இன்னொரு உதாரணம் இராசி கட்டத்தில் மிதுன லக்னத்துக்கு 11ல் சூரியன் உச்ச திக்பலம் பெற்று இருந்து பாவக கட்டத்தில் 10 ஆம் வீடான மீனத்தில் இருந்தால் தசா புத்தி அந்தரங்களில் 10ஆம் வீட்டில் அமர்ந்த கிரகம்  போல் உச்ச பலத்தில் தொழில் வளர்ச்சி தருவார்.

(குறிப்பு: இராசி கட்டத்தில் ஒரு லக்னம் இருக்கும் 2 மணி நேரத்தில் பாவக கட்டத்தில் கிரகங்கள் மாறி நிற்கும் வாய்ப்பு அதிகம். ஆதலால் பிறந்த நேரம் சரியாக இருக்க வேண்டும்.)

இவ்வாறாக பாவக கட்டம் வைத்து பார்ப்பது நல்லது.

1008 ஶிவ லிங்கங்களின் பெயர்கள் ஆயிரம் பேருக்கு பகிருங்கள் கண்டிப்பாக நல்லது நடக்கும்

1008 லிங்கம்

(எல்லோரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)

1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி லிங்கம் 10 அங்கி லிங்கம் 11 அங்கு லிங்கம் 12 அசரிய லிங்கம் 13 அசுர லிங்கம் 14 அசை லிங்கம் 15 அசோக லிங்கம் 16 அச்சு லிங்கம் 17 அஞ்சா லிங்கம் 18 அட்ட லிங்கம் 19 அட்ச லிங்கம் 20 அட்சதை லிங்கம் 21 அட்டோ லிங்கம் 22 அடிமுடி லிங்கம் 23 அடி லிங்கம் 24 அணணா லிங்கம் 25 அண்ட லிங்கம் 26 அணி லிங்கம் 27 அணு லிங்கம் 28 அத்தி லிங்கம் 29 அதழ் லிங்கம் 30 அதிபதி லிங்கம் 31 அதிர்ஷ்ட லிங்கம் 32 அதிய லிங்கம் 33 அதிசய லிங்கம் 34 அதீத லிங்கம் 35 அந்தார லிங்கம் 36 அந்தி லிங்கம் 37 அநந்தசாயி லிங்கம் 38 அநலி லிங்கம் 39 அநேக லிங்கம் 40 அப்ப லிங்கம் 41 அப்பு லிங்கம் 42 அபய லிங்கம் 43 அபி லிங்கம் 44 அபிநய லிங்கம் 45 அபிஷேக லிங்கம் 46 அம்பல லிங்கம் 47 அம்பி லிங்கம் 48 அம்புசி லிங்கம் 49 அம்ம லிங்கம் 50 அமல லிங்கம் 51 அமர லிங்கம் 52 அமராவதி லிங்கம் 53 அமிர்த லிங்கம் 54 அர்ச்சனை லிங்கம் 55 அர்ச்சுண லிங்கம் 56 அர்த்த லிங்கம் 57அரச லிங்கம் 58 அரவ லிங்கம் 59 அரங்க லிங்கம் 60 அரம்பை லிங்கம் 61 அரளி லிங்கம் 62 அரி லிங்கம் 63 அரிணி லிங்கம் 64 அரிமா லிங்கம் 65 அருக லிங்கம் 66 அருணை லிங்கம் 67 அருமணி லிங்கம் 68 அரும்பு லிங்கம் 69 அருளி லிங்கம் 70 அரூப லிங்கம் 71 அல்லி லிங்கம் 72 அலை லிங்கம் 73 அவைய லிங்கம் 74 அழகு லிங்கம் 75 அளத்தி லிங்கம் 76 அற லிங்கம் 77 அறிவு லிங்கம் 78 அன்பு லிங்கம் 79 அன்புரு லிங்கம் 80 அன்ன லிங்கம் 81 அனுதாபி லிங்கம் 82 அனுபூதி லிங்கம் 83 அஷ்ட லிங்கம் 84 ஆக்கை லிங்கம் 85 ஆகம லிங்கம் 86ஆகாய லிங்கம் 87 ஆசான லிங்கம் 88 ஆசிரிய லிங்கம் 89 ஆசி லிங்கம் 90 ஆட லிங்கம் 91 ஆடரி லிங்கம் 92 ஆண் லிங்கம் 93 ஆண்டி லிங்கம் 94 ஆணுரு லிங்கம் 95 ஆத்ம லிங்கம் 96 ஆதார லிங்கம் 97 ஆதி லிங்கம் 98 ஆதிரி லிங்கம் 99 ஆதிசேவி லிங்கம் 100 ஆதிரை லிங்கம் 101 ஆதினா லிங்கம் 102 ஆபேரி லிங்கம் 103 ஆமிர லிங்கம் 104 ஆமை லிங்கம் 105 ஆய லிங்கம் 106 ஆயதி லிங்கம் 107 ஆர்த்தி லிங்கம் 108 ஆரண்ய லிங்கம் 109 ஆரண லிங்கம் 110 ஆராதனை லிங்கம் 111 ஆராபி லிங்கம் 112 ஆரூர லிங்கம் 113 ஆரோக்ய லிங்கம் 114 ஆலகால லிங்கம் 115 ஆலவாய் லிங்கம் 116 ஆலால லிங்கம் 117 ஆலி லிங்கம் 118 ஆவார லிங்கம் 119 ஆவி லிங்கம் 120 ஆவே லிங்கம் 121 ஆவுடை லிங்கம் 122 ஆழி லிங்கம் 123 ஆனந்த லிங்கம் 124 இக்கு லிங்கம் 125 இசை லிங்கம் 126 இடப லிங்கம் 127 இணை லிங்கம் 128 இதய லிங்கம் 129 இந்திர லிங்கம் 130 இமய லிங்கம் 131 இமை லிங்கம் 132 இரட்டை லிங்கம் 133 இராம லிங்கம் 134 இலக்கிய லிங்கம் 135 இலாப லிங்கம் 136 இளைய லிங்கம் 137 இறவா லிங்கம் 138 இறை லிங்கம் 139 இனிமை லிங்கம் 140 ஈகை லிங்கம் 141 ஈசான்ய லிங்கம் 142 ஈட லிங்கம் 143 ஈடண லிங்கம் 144 ஈடித லிங்கம் 145 ஈடிலி லிங்கம் 146 ஈர்ப்பு லிங்கம் 147 ஈழ லிங்கம் 148 ஈஸ்வர லிங்கம் 149 ஈஸ்வரி லிங்கம் 150 உக்ர லிங்கம் 151 உச்சி லிங்கம் 152 உசித லிங்கம் 153 உடம்பி லிங்கம் 154 உடுக்கை லிங்கம் 155 உணர் லிங்கம் 156 உத்தம லிங்கம் 157 உத்ராட்ச லிங்கம் 158 உதய லிங்கம் 159 உதிர லிங்கம் 160 உப்பிலி லிங்கம் 161 உப்பு லிங்கம் 162 உப லிங்கம் 163 உபதேச லிங்கம் 164 உபய லிங்கம் 165 உமா லிங்கம் 166 உமை லிங்கம் 167 உயிர் லிங்கம் 168 உரி லிங்கம் 169 உரு லிங்கம் 170 உருணி லிங்கம் 171 உருமணி லிங்கம் 172 உவப்பு லிங்கம் 173 உழவு லிங்கம் 174 உழுவை லிங்கம் 175 உற்சவ லிங்கம் 176 உன்னி லிங்கம் 177 ஊக்க லிங்கம் 178 ஊசி லிங்கம் 179 ஊதா லிங்கம் 180 ஊருணி லிங்கம் 181 ஊழி லிங்கம் 182 ஊற்று லிங்கம் 183 எட்டி லிங்கம் 184 எட்டு லிங்கம் 185 எதனா லிங்கம் 186 எந்தை லிங்கம் 187 எம லிங்கம் 188 எருது லிங்கம் 189 எல்லை லிங்கம் 190 எளிய லிங்கம் 191 எழிலி லிங்கம் 192 எழுத்தறி லிங்கம் 193 என்குரு லிங்கம் 194 ஏக லிங்கம் 195 ஏகம லிங்கம் 196 ஏகா லிங்கம் 197 ஏகாம்பர லிங்கம் 198 ஏகாந்த லிங்கம் 199 ஏடக லிங்கம் 200 ஏந்திழை லிங்கம் 201 ஏம லிங்கம் 202 ஏர் லிங்கம் 203 ஏரி லிங்கம் 204 ஏவச லிங்கம் 205 ஏழிசை லிங்கம் 206 ஏறு லிங்கம் 207 ஏனாதி லிங்கம் 208 ஐங்கர லிங்கம் 209 ஐய லிங்கம் 210 ஐராவத லிங்கம் 211 ஒப்பிலா லிங்கம் 212 ஒப்பிலி லிங்கம் 213 ஒருமை லிங்கம் 214 ஒளி லிங்கம் 215 ஓசை லிங்கம் 216 ஓடேந்தி லிங்கம் 217 ஓம் லிங்கம் 218 ஓம்கார லிங்கம் 219 ஓவிய லிங்கம் 220 ஔடத லிங்கம் 221 ஔவை லிங்கம் 222 கங்கா லிங்கம் 223 கச்ச லிங்கம் 224 கண்ட லிங்கம் 225 கடம்ப லிங்கம் 226 கடார லிங்கம் 227 கடிகை லிங்கம் 228 கடை லிங்கம் 229 கதிர் லிங்கம் 230 கதலி லிங்கம் 231 கந்த லிங்கம் 232 கபால லிங்கம் 233 கபில லிங்கம் 234 கமல லிங்கம் 235 கயா லிங்கம் 236 கயிலை லிங்கம் 237 கர்ண லிங்கம் 238 கர்ப்ப லிங்கம் 239 கரண லிங்கம் 240 கரு லிங்கம் 241 கருட லிங்கம் 242 கருமை லிங்கம் 243 கருணை லிங்கம் 244 கல்ப லிங்கம் 245 கல்வி லிங்கம் 246 கலி லிங்கம் 247கலை லிங்கம் 248 கவி லிங்கம் 249 கற்பக லிங்கம் 250 கற்பூர லிங்கம் 251 கன்னி லிங்கம் 252 கன லிங்கம் 253 கனக லிங்கம் 254 கனி லிங்கம் 255 கஸ்தூரி லிங்கம் 256 கஜ லிங்கம் 257 கருணாகர லிங்கம் 258 காசி லிங்கம் 259 காஞ்சி லிங்கம் 260 காடக லிங்கம் 261 காத்த லிங்கம் 262 காதம்பரி லிங்கம் 263 காந்த லிங்கம் 264 காப்பு லிங்கம் 265 காம லிங்கம் 266 கார் லிங்கம் 267கார்த்திகைலிங்கம் 268 காரண லிங்கம் 269 கால லிங்கம் 270 காவி லிங்கம் 271காவிய லிங்கம் 272 காவேரி லிங்கம் 273 காளி லிங்கம் 274 காளத்தி லிங்கம் 275 காளை லிங்கம் 276 கான லிங்கம் 277கிண்கிணி லிங்கம் 278 கிரி லிங்கம் 279 கிரியை லிங்கம் 280 கிரீட லிங்கம் 281 கிருப லிங்கம் 282 கிள்ளை லிங்கம் 283 கீத லிங்கம் 284 கீர்த்தி லிங்கம் 285 கீர்த்தன லிங்கம் 286 குக லிங்கம் 287 குங்கும லிங்கம் 288 குஞ்சு லிங்கம் 289 குட லிங்கம் 290 குடுமி லிங்கம் 291 குண லிங்கம் 292 குணக்ரி லிங்கம் 293 குபேர லிங்கம் 294 குருதி லிங்கம் 295 குமர லிங்கம் 296 குமரி லிங்கம் 297 குமுத லிங்கம் 298 குல லிங்கம் 299 குழலி லிங்கம் 300 குழவி லிங்கம் 301 குழை லிங்கம் 302 குற்றால லிங்கம் 303 குன்று லிங்கம் 304 குண்டலி லிங்கம் 305 குந்த லிங்கம் 306 கும்ப லிங்கம் 307 குரவ லிங்கம் 308 குறிஞ்சி லிங்கம் 309 கூததாடி லிங்கம் 310 கூத்து லிங்கம் 311 கூர்ம லிங்கம் 312 கெஜ லிங்கம் 313 கேச லிங்கம் 314 கேசரி லிங்கம் 315 கேசவ லிங்கம் 316 கேடிலி லிங்கம் 317 கேதார் லிங்கம் 318 கேள்வி லிங்கம் 319 கைலாய லிங்கம் 320 கொங்கு லிங்கம் 321 கொடி லிங்கம் 322 கொடு லிங்கம் 323 கொளஞ்சி லிங்கம் 324 கொற்றை லிங்கம் 325 கொன்றை லிங்கம் 326 கோ லிங்கம் 327 கோகழி லிங்கம் 328 கோகுல லிங்கம் 329 கோட்டை லிங்கம் 330 கோடி லிங்கம் 331 கோண் லிங்கம் 332 கோண லிங்கம் 333 கோதண்ட லிங்கம் 334 கோதை லிங்கம் 335 கோப லிங்கம் 336 கோபி லிங்கம் 337 கோமதி லிங்கம் 338 கோல லிங்கம் 339 கௌசிக லிங்கம் 340 கௌதம லிங்கம் 341 கௌரி லிங்கம் 342 சக்தி லிங்கம் 343 சக்கர லிங்கம் 344 சகஸ்ர லிங்கம் 345 சகல லிங்கம் 346 சங்க லிங்கம் 347 சங்கம லிங்கம் 348 சங்கர லிங்கம் 349 சங்கு லிங்கம் 350 சஞ்சீவி லிங்கம் 351 சடாட்சர லிங்கம் 352 சடைமுடி லிங்கம் 353 சண்முக லிங்கம் 354 சத்திய லிங்கம் 355 சதங்கை லிங்கம் 356சதய லிங்கம் 357 சதா லிங்கம் 358 சதாசிவ லிங்கம் 359 சதுர் லிங்கம் 360 சதுர்த்தி லிங்கம் 361 சதுரங்க லிங்கம் 362 சதுரகிரி லிங்கம் 363 சந்த லிங்கம் 364 சந்திர லிங்கம் 365 சந்தன லிங்கம் 366 சந்தான லிங்கம் 367 சப்த லிங்கம் 368 சபா லிங்கம் 369 சம்பந்த லிங்கம் 370 சம்பு லிங்கம் 371 சமுத்திர லிங்கம் 372 சயன லிங்கம் 373 சர்வேஸ லிங்கம் 374 சரச லிங்கம் 375 சரீர லிங்கம் 376 சவரி லிங்கம் 377 சற்குண லிங்கம் 378 சஹான லிங்கம் 379 சற்குரு லிங்கம் 380 சாட்சி லிங்கம் 381 சாணக்ய லிங்கம் 382 சாதக லிங்கம் 383 சாதனை லிங்கம் 384 சாதி லிங்கம் 385 சாது லிங்கம் 386 சாந்த லிங்கம் 387 சாந்து லிங்கம் 388 சாம்ப லிங்கம் 389 சாமுண்டி லிங்கம் 390 சிகர லிங்கம் 391 சிகா லிங்கம் 392 சிகரி லிங்கம் 393 சிகை லிங்கம் 394 சிங்கார லிங்கம் 395 சிசு லிங்கம் 396 சித்தி லிங்கம் 397 சித்திரை லிங்கம் 398 சிந்தாமணிலிங்கம் 399 சிந்து லிங்கம் 400 சிநேக லிங்கம் 401 சிப்பி லிங்கம் 402 சிபி லிங்கம் 403 சிம்ம லிங்கம் 404 சிர லிங்கம் 405 சிரஞ்சீவி லிங்கம் 406 சிரபதி லிங்கம் 407 சிருஷ்டி லிங்கம் 408 சிலம்பு லிங்கம் 409 சிவ லிங்கம் 410 சிவகதி லிங்கம் 411 சிவாய லிங்கம் 412 சிற்பவ லிங்கம் 413 சினை லிங்கம் 414 சிஷ்ட லிங்கம் 415 சீதன லிங்கம் 416 சீதாரி லிங்கம் 417 சீமை லிங்கம் 418 சீர்மை லிங்கம் 419 சீற்ற லிங்கம் 420 சீனி லிங்கம் 421 சுக்கிர லிங்கம் 422 சுக லிங்கம் 423 சுகந்த லிங்கம் 424 சுகநிதி லிங்கம் 425 சுகுண லிங்கம் 426 சுடர் லிங்கம் 427 சுத்த லிங்கம் 428 சுதர்சண லிங்கம் 429 சுந்தர லிங்கம் 430 சுந்தரி லிங்கம் 431 சுப்பு லிங்கம் 432 சுமித்ர லிங்கம் 433 சுய லிங்கம் 434 சுயம்பு லிங்கம் 435 சுரபி லிங்கம் 436 சுருதி லிங்கம் 437 சுருளி லிங்கம் 438 சுரை லிங்கம் 439 சுவடி லிங்கம் 440 சுவடு லிங்கம் 441 சுவர்ண லிங்கம் 442 சுவாச லிங்கம் 443 சுவாதி லிங்கம் 444 சுனை லிங்கம் 445 சூட்சம லிங்கம் 446 சூர லிங்கம் 447 சூரி லிங்கம் 448 சூரிய லிங்கம் 449 சூல லிங்கம் 450 சூள்முடி லிங்கம் 451 சூளாமணி லிங்கம் 452 செக்கர் லிங்கம் 453 செங்கு லிங்கம் 454 செண்பக லிங்கம் 455 செந்தூர லிங்கம் 456 செம்ம லிங்கம் 457 செம்பாத லிங்கம் 458 செரு லிங்கம் 459 செருக்கு லிங்கம் 460 செல்வ லிங்கம் 461 செழுமை லிங்கம் 462 சேகர லிங்கம் 463 சேலிங்கம் 464 சேது லிங்கம் 465 சேர்ப்பு லிங்கம் 466 சேற்று லிங்கம் 467 சைல லிங்கம் 468 சைவ லிங்கம் 469 சொக்க லிங்கம் 470 சொப்பன லிங்கம் 471 சொர்க்க லிங்கம் 472 சொரூப லிங்கம் 473 சோம லிங்கம் 474 சோண லிங்கம் 475 சோபன லிங்கம் 476 சோலை லிங்கம் 477 சோழ லிங்கம் 478 சோழி லிங்கம் 479 சோற்று லிங்கம் 480 சௌந்தர்ய லிங்கம் 481 சௌந்தர லிங்கம் 482 ஞான லிங்கம் 483 தகழி லிங்கம் 484 தகு லிங்கம் 485 தங்க லிங்கம் 486 தச லிங்கம் 487 தட்சண லிங்கம் 488 தடாக லிங்கம் 489 தத்துவ லிங்கம் 490 தந்த லிங்கம் 491 தந்திர லிங்கம் 492 தமிழ் லிங்கம் 493 தர்பை லிங்கம் 494 தர்ம லிங்கம் 495 தருண லிங்கம் 496 தவ லிங்கம் 497 தளிர் லிங்கம் 498 தன லிங்கம் 499 தனி லிங்கம் 500 தவசி லிங்கம் 501 தாண்டக லிங்கம் 502 தாண்டவ லிங்கம் 503 தாமு லிங்கம் 504 தாய் லிங்கம் 505 தார லிங்கம் 506 தாழி லிங்கம் 507 தாழை லிங்கம் 508 தாள லிங்கம் 509 தான்ய லிங்கம் 510 தாரகை லிங்கம் 511 திக்கு லிங்கம் 512 திகம்பர லிங்கம் 513 திகழ் லிங்கம் 514 தியாக லிங்கம் 515 தியான லிங்கம் 516 திரி லிங்கம் 517 திரிபுர லிங்கம் 518 திரு லிங்கம் 519 திருமேனி லிங்கம் 520 திருவடி லிங்கம் 521 திருவாசக லிங்கம் 522 திருவாத லிங்கம் 523 திலக லிங்கம் 524 திவ்ய லிங்கம் 525 தீ லிங்கம் 526 தீட்சை லிங்கம் 527 தீர்க்க லிங்கம் 528 தீர்த்த லிங்கம் 529 தீப லிங்கம் 530 தீர லிங்கம் 531 தீர்ப்பு லிங்கம் 532 துதி லிங்கம் 533 துர்கை லிங்கம் 534 துருவ லிங்கம் 535 துலா லிங்கம் 536 துளசி லிங்கம் 537 துறவு லிங்கம் 538 தூங்கா லிங்கம் 539 தூண்டா லிங்கம் 540 தூமணி லிங்கம் 541 தூய லிங்கம் 542 தூளி லிங்கம் 543 தெங்கு லிங்கம் 544 தெய்வ லிங்கம் 545 தெரிவை லிங்கம் 546 தெளி லிங்கம் 547 தென்னவ லிங்கம் 548 தேக லிங்கம் 549 தேகனி லிங்கம் 550 தேகி லிங்கம் 551 தேச லிங்கம் 552 தேசு லிங்கம் 553 தேயு லிங்கம் 554 தேர லிங்கம் 555 தேவ லிங்கம் 556 தேவபத லிங்கம் 557 தேவாதி லிங்கம் 558 தேவு லிங்கம் 559 தேன் லிங்கம் 560 தேன்மணி லிங்கம் 561 தேன லிங்கம் 562 தேனுக லிங்கம் 563 தைரிய லிங்கம் 564 தொகை லிங்கம் 565 தொட்டி லிங்கம் 566 தொடி லிங்கம் 567 தொடைய லிங்கம் 568 தொண்டக லிங்கம் 569 தொண்டை லிங்கம் 570 தொல் லிங்கம் 571 தோகச லிங்கம் 572 தோண்டி லிங்கம் 573 தோணி லிங்கம் 574 தோத்திர லிங்கம் 575 தோரண லிங்கம் 576 தோரி லிங்கம் 577 தோழ லிங்கம் 578 தோன்ற லிங்கம் 579 தௌத லிங்கம் 580 தௌல லிங்கம் 581 நகமுக லிங்கம் 582 நகு லிங்கம் 583 நகை லிங்கம் 584 நங்கை லிங்கம் 585 நசை லிங்கம் 586 நஞ்சு லிங்கம் 587 நடன லிங்கம் 588 நடம்புரி லிங்கம் 589 நடு லிங்கம் 590 நதி லிங்கம் 591 நந்தி லிங்கம் 592 நம்பி லிங்கம் 593 நம லிங்கம் 594 நயன லிங்கம் 595 நர்மதை லிங்கம் 596 நலமிகு லிங்கம் 597 நவ லிங்கம் 598 நவமணி லிங்கம் 599 நவிர லிங்கம் 600 நற்குண லிங்கம் 601 நற்றுணை லிங்கம் 602 நறுமண லிங்கம் 603 நன்மணி லிங்கம் 604 நன்மை லிங்கம் 605 நனி லிங்கம் 606 நா லிங்கம் 607 நாக லிங்கம் 608 நாச்சி லிங்கம் 609 நாசி லிங்கம் 610 நாட லிங்கம் 611 நாடி லிங்கம் 612 நாத்திர லிங்கம் 613 நாத லிங்கம் 614 நாரண லிங்கம் 615 நாரணி லிங்கம் 616 நாரி லிங்கம் 617 நாபிச லிங்கம் 618 நாயன லிங்கம் 619 நாயாடி லிங்கம் 620 நாவ லிங்கம் 621 நாற்கர லிங்கம் 622 நான்மறை லிங்கம் 623 நான்முக லிங்கம் 624 நிகர் லிங்கம் 625 நித்தில லிங்கம் 626 நித்ய லிங்கம் 627 நிதர்சண லிங்கம் 628 நிதி லிங்கம் 629 நிபவ லிங்கம் 630 நிர்மல லிங்கம் 631 நிரஞ்சன லிங்கம் 632 நிரம்ப லிங்கம் 633 நிருதி லிங்கம் 634 நிமல லிங்கம் 635 நில லிங்கம் 636 நிலை லிங்கம் 637 நிவேத லிங்கம் 638 நிறை லிங்கம் 639 நிஜ லிங்கம் 640 நிசாக லிங்கம் 641 நீடு லிங்கம் 642 நீடுநீர் லிங்கம் 643 நீத்தவ லிங்கம் 644 நீதி லிங்கம் 645 நீர்ம லிங்கம் 646 நீரச லிங்கம் 647 நீரேறு லிங்கம் 648 நீல லிங்கம் 649 நீள்முடி லிங்கம் 650 நீறாடி லிங்கம் 651 நீறு லிங்கம் 652 நுதற் லிங்கம் 653 நுதி லிங்கம் 654 நூதன லிங்கம் 655 நெகிழ் லிங்கம் 656 நெஞ்சு லிங்கம் 657 நெட்ட லிங்கம் 658 நெடு லிங்கம் 659 நெய் லிங்கம் 660 நெற்றி லிங்கம் 661 நெறி லிங்கம் 662 நேச லிங்கம் 663 நேர் லிங்கம் 664 நைச்சி லிங்கம் 665 நைவேத்ய லிங்கம் 666 நொச்சி லிங்கம் 667 நோக்கு லிங்கம் 668 நோன்பு லிங்கம் 669 பசு லிங்கம் 670 பசுவ லிங்கம் 671 பசுபதி லிங்கம் 672 பஞ்ச லிங்கம் 673 பஞ்சாட்சர லிங்கம் 674 பட்டக லிங்கம் 675 படரி லிங்கம் 676 படிக லிங்கம் 677 பண்டார லிங்கம் 678 பண்டித லிங்கம் 679 பத்ம லிங்கம் 680 பத்ர லிங்கம் 681 பத்திர லிங்கம் 682 பதி லிங்கம் 683 பதிக லிங்கம் 684 பர்வத லிங்கம் 685 பரசு லிங்கம் 686 பரத லிங்கம் 687 பரம லிங்கம் 688 பரமாத்ம லிங்கம் 689 பரமேஸ்வர லிங்கம் 690 பரணி லிங்கம் 691 பரிதி லிங்கம் 692 பவண லிங்கம் 693 பவணி லிங்கம் 694 பவநந்தி லிங்கம் 695 பவழ லிங்கம் 696 பவாணி லிங்கம் 697 பவித்ர லிங்கம் 698 பளிங்கு லிங்கம் 699 பன்னக லிங்கம் 700 பனி லிங்கம் 701 பரகதி லிங்கம் 702 பராங்க லிங்கம் 703 பராபர லிங்கம் 704 பவநாச லிங்கம் 705 பா லிங்கம் 706 பாக்ய லிங்கம் 707 பாக லிங்கம் 708 பாச லிங்கம் 709 பாசறை லிங்கம் 710 பாசுர லிங்கம் 711 பாத லிங்கம் 712 பாதாள லிங்கம் 713 பாதி லிங்கம் 714 பாதிரி லிங்கம் 715 பார்வதி லிங்கம் 716 பாரதி லிங்கம் 717 பாராயண லிங்கம் 718 பாரி லிங்கம் 719 பாரிஜாத லிங்கம் 720 பாயிர லிங்கம் 721 பாலக லிங்கம் 723 பாலா லிங்கம் 723 பாவை லிங்கம் 724 பானு லிங்கம் 725 பாஷான லிங்கம் 726 பாகோட லிங்கம் 727 பாசுபத லிங்கம் 728 பாணிக லிங்கம் 729 பார்த்திப லிங்கம் 730 பாநேமி லிங்கம் 731 பாம்பு லிங்கம் 732 பாழி லிங்கம் 733 பிச்சி லிங்கம் 734 பிச்சை லிங்கம் 735 பிட்டு லிங்கம் 736 பிடரி லிங்கம் 737 பிடாரி லிங்கம் 738 பிடி லிங்கம் 739 பிண்ட லிங்கம் 740 பித்த லிங்கம் 741 பிதா லிங்கம் 742 பிம்ப லிங்கம் 743 பிரகதி லிங்கம் 744 பிரகாச லிங்கம் 745 பிரசன்ன லிங்கம் 746 பிரணவ லிங்கம் 747 பிரதர்சன லிங்கம் 748 பிரபாகர லிங்கம் 749 பிரபு லிங்கம் 750 பிரம்ம லிங்கம் 751 பிரம்பு லிங்கம் 752 பிரமிள லிங்கம் 753 பிராண லிங்கம் 754 பிராசித லிங்கம் 755 பிரிய லிங்கம் 756 பிரேம லிங்கம் 757 பிள்ளை லிங்கம் 758 பிழம்பு லிங்கம் 759 பிறவி லிங்கம் 760 பிறை லிங்கம் 761 பீச லிங்கம் 762 பீட லிங்கம் 763 பீடு லிங்கம் 764 பீத லிங்கம் 765 பீதகார லிங்கம் 766 பீதசார லிங்கம் 767 பீதமணி லிங்கம் 768 பீதாம்பர லிங்கம் 769 பீர லிங்கம் 770 பீம லிங்கம் 771 புகழ் லிங்கம் 772 புங்கவ லிங்கம் 773 புங்கவி லிங்கம் 774 புடக லிங்கம் 775 புண்ணிய லிங்கம் 776 புத்தி லிங்கம் 777 புத்ர லிங்கம் 778 புதிர் லிங்கம் 779 புது லிங்கம் 780 புரட்சி லிங்கம் 781 புரவு லிங்கம் 782 பராண லிங்கம் 783 புரி லிங்கம் 784 புருஷ லிங்கம் 785 புருவ லிங்கம் 786 புலரி லிங்கம் 787 புலி லிங்கம் 788 புவன லிங்கம் 789 புற்று லிங்கம் 790 புற லிங்கம் 791 புன்னை லிங்கம் 792 புனித லிங்கம் 793 புனை லிங்கம் 794 புஜங்க லிங்கம் 795 புஷ்கர லிங்கம் 796 புஷ்ப லிங்கம் 797 பூசனை லிங்கம் 798 பூத லிங்கம் 799 பூதர லிங்கம் 800 பூதி லிங்கம் 801 பூபதி லிங்கம் 802 பூபால லிங்கம் 803 பூதவணி லிங்கம் 804 பூர்ண லிங்கம் 805 பூர்த்தி லிங்கம் 806 பூர்வ லிங்கம் 807 பூரணி லிங்கம் 808 பூமித லிங்கம் 809 பூமுக லிங்கம் 810 பூவிழி லிங்கம் 811 பூலோக லிங்கம் 812 பூஜித லிங்கம் 813 பெண் லிங்கம் 814 பெண்பாக லிங்கம் 815 பெரு லிங்கம் 816 பேரின்ப லிங்கம் 817 பேழை லிங்கம் 818 பைரவி லிங்கம் 819பொன்னம்பலலிங்கம் 820 பொன்னி லிங்கம் 821 பொருந லிங்கம் 822 பொருப்பு லிங்கம் 823 பொழி லிங்கம் 824 பொய்கை லிங்கம் 825 போக லிங்கம் 826 போதக லிங்கம் 827 போதன லிங்கம் 828 போதி லிங்கம் 829 போற்றி லிங்கம் 830 போனக லிங்கம் 831 பௌதிக லிங்கம் 832பௌர்ணமி லிங்கம் 833 மகர லிங்கம் 834 மகவு லிங்கம் 835 மகா லிங்கம் 836 மகிழ லிங்கம் 837 மகுட லிங்கம் 838 மகுடி லிங்கம் 839 மகேச லிங்கம் 840 மகேஸ்வர லிங்கம் 841 மங்கள லிங்கம் 842 மஞ்சரி லிங்கம் 843 மஞ்சு லிங்கம் 844 மண லிங்கம் 845 மணி லிங்கம் 846 மதன லிங்கம் 847 மதி லிங்கம் 848 மந்தாரை லிங்கம் 849 மந்திர லிங்கம் 850 மயான லிங்கம் 851 மயூர லிங்கம் 852 மரகத லிங்கம் 853 மருக லிங்கம் 854 மருத லிங்கம் 855 மருது லிங்கம் 856 மலர் லிங்கம் 857 மழலை லிங்கம் 858 மவுலி லிங்கம் 859 மன்னாதி லிங்கம் 860 மனித லிங்கம் 861 மனோ லிங்கம் 862 மலை லிங்கம் 863 மாங்கல்ய லிங்கம் 864 மாசறு லிங்கம் 865 மாசி லிங்கம் 866 மாசிவ லிங்கம் 867 மாட்சி லிங்கம் 868 மாணிக்க லிங்கம் 869 மாதங்கி லிங்கம் 870 மாதவ லிங்கம் 871 மாதவி லிங்கம் 872 மாது லிங்கம் 873 மாதேவி லிங்கம் 874 மாமிச லிங்கம் 875 மாயை லிங்கம் 876 மாலை லிங்கம் 877 மார்க்க லிங்கம் 878 மிசை லிங்கம் 879 மிண்டை லிங்கம் 880 மீளி லிங்கம் 881 மீன லிங்கம் 882 முக்கனீ லிங்கம் 883 முக்தி லிங்கம் 884 முகுந்த லிங்கம் 885 முடி லிங்கம் 886 முத்து லிங்கம் 887 மும்மல லிங்கம் 888 முரசு லிங்கம் 889 முருக லிங்கம் 890 முல்லை லிங்கம் 891 முனி லிங்கம் 892 மூர்த்தி லிங்கம் 893 மூல லிங்கம் 894 மெய் லிங்கம் 895 மேக லிங்கம் 896 மேதினி லிங்கம் 897 மேவி லிங்கம் 898 மேனி லிங்கம் 899 மொழி லிங்கம் 900 மொட்டு லிங்கம் 901 மோட்ச லிங்கம் 902 மோன லிங்கம் 903 மோலி லிங்கம் 904 மௌன லிங்கம் 905 யதி லிங்கம் 906 யாக லிங்கம் 907 யாசக லிங்கம் 908 யாத்திரை லிங்கம் 909 யுக்தி லிங்கம் 910 யுவ லிங்கம் 911 யோக லிங்கம் 912 யோகி லிங்கம் 913 ரகசிய லிங்கம் 914 ரம்ய லிங்கம் 915 ரமண லிங்கம் 916 ரத்தின லிங்கம் 917 ரத லிங்கம் 918 ராக லிங்கம் 919 ராட்சச லிங்கம் 920 ராவண லிங்கம் 921 ராஜ லிங்கம் 922 ரிஷப லிங்கம் 923 ரிஷி லிங்கம் 924 ருத்ர லிங்கம் 925 ரூப லிங்கம் 926 ரௌத்திர லிங்கம் 927 லகரி லிங்கம் 928 லாவண்ய லிங்கம் 929 லீலா லிங்கம் 930 லோக லிங்கம் 931 வசந்த லிங்கம் 932 வஞ்சி லிங்கம் 933 வடுக லிங்கம் 934 வர்ம லிங்கம் 935 வர லிங்கம் 936 வருண லிங்கம் 937 வல்லப லிங்கம் 938 வழக்கு லிங்கம் 939 வள்ளுவ லிங்கம் 940 வளர் லிங்கம் 941 வன லிங்கம் 942 வனப்பு லிங்கம் 943 வஜ்ர லிங்கம் 944 வாகை லிங்கம் 945 வாசி லிங்கம் 946 வாணி லிங்கம் 947 வாயு லிங்கம் 948 வார்ப்பு லிங்கம் 949 வாழ்க லிங்கம் 950 வான லிங்கம் 951 வானாதி லிங்கம் 952 வார்சடை லிங்கம் 953 விக்ர லிங்கம் 954 விக்ரம லிங்கம் 955 விகட லிங்கம் 956 விகார லிங்கம் 957 விகிர்த லிங்கம் 958 வசித்ர லிங்கம் 959 விடங்க லிங்கம் 960 வித்தக லிங்கம் 961 விதி லிங்கம் 962 விது லிங்கம் 963 விந்தை லிங்கம் 964 விநாசக லிங்கம் 965 விபீஷ்ண லிங்கம் 966 விபூதி லிங்கம் 967 விமல லிங்கம் 968 வியூக லிங்கம் 969 விருட்சக லிங்கம் 970 வில்வ லிங்கம் 971 விளம்பி லிங்கம் 972 விழி லிங்கம் 973 வினைதீர் லிங்கம் 974 வினோத லிங்கம் 975 விஜய லிங்கம் 976 விஷ்ணு லிங்கம் 977 விஸ்வ லிங்கம் 978 விஸ்வேஸ்வரலிங்கம் 979 வீர லிங்கம் 980 வீணை லிங்கம் 981 வெற்றி லிங்கம் 982 வெற்பு லிங்கம் 983 வெள்ளி லிங்கம் 984 வேங்கட லிங்கம் 985 வேங்கை லிங்கம் 986 வேட்டுவ லிங்கம் 987 வேத லிங்கம் 988 வேதாந்த லிங்கம் 989 வேம்பு லிங்கம் 990 வேழ லிங்கம் 991 வேள்வி லிங்கம் 992 வைகை லிங்கம் 993 வைர லிங்கம் 994 வைத்திய லிங்கம் 995 வைய லிங்கம் 996 ஜடா லிங்கம் 997 ஜதி லிங்கம் 998 ஜல லிங்கம் 999 ஜீவ லிங்கம் 1000 ஜெக லிங்கம் 1001 ஜெய லிங்கம் 1002 ஜென்ம லிங்கம் 1003 ஜோதி லிங்கம் 1004 ஸ்ரீ லிங்கம் 1005 ஸோபித லிங்கம் 1006 ஹேம லிங்கம் 1007 ஐஸ்வர்ய லிங்கம் 1008 சுப லிங்கம்..

⚘ சிவனே போற்றி ⚘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

top posts