🙏🙏சத்துமாவு தயாரிக்கும் முறை🙏🙏
இதுதான் உண்மையான சத்துமாவு
இதை தயாரிக்கும் முறை:
இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.
🔥தேவையான பொருட்கள்🔥
ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2
🔥செய்முறை🔥
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.
🔥தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
🔥பயன்கள்🔥
🌿1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.
🌿2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.
🌿3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
🌿4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
🌿5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
🌿6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
🌿7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.
🌿8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
🔥குறிப்பு🔥
💧1.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.
💧2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.
இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.
உங்கள் ஆரோக்கியத்தில் எப்போதும் அக்கறையுள்ள *வேதா ஹல்த் கேர் சென்டர்*
Monday, February 25, 2019
வீட்டிலேயே ஹார்லிக்ஸ் தயாரிக்க முடியும்
Subscribe to:
Post Comments (Atom)
top posts
-
On 09/08/19.... #வரலட்சுமி_பூஜைக்கு தேவையான பொருட்கள் #மண்டபத்திற்கு_அலங்காரபொருட்கள். 1- சின்ன வாழைக்கன்று இரண்டு 2- தோரணம் (கிட...
-
*திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும் என்ன? என்பது பற்றிப் பார்ப்போ...
-
சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் - ஜடாயு சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன...
-
ஶ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி ॥ த்⁴யானம் ॥ ஸின்தூ³ராருணவிக்³ரஹாம் த்ரினயனாம் மாணிக்யமௌலிஸ்பு²ரத் தாரானாயகஶேக²ராம் ஸ்மிதமுகீ²மாபீனவக்ஷோருஹாம் । ப...
-
ஆஷிபா கொலையின் பின்னணி என்ன? ஜம்மு காஷ்மீர் அரசின் வருவாய் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் வீரி சட்டமன...
-
“#பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம், எதற்காக? “-சதுர்த்தி ஸ்பெஷல் !!! (பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோம...
-
The Health Ministry banned 344 fixed drug combinations through a gazette notification issued over the weekend. These include several c...
-
வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன ச...
-
அரசை வ.காளி முத்து நாடார் கூறுவதை கேட்போமா? உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் கூறுங்கள். உண்மை என்ன என்று அறிந்து கொள்வ...
-
திரு.கல்யாண் ராமன், வன்னியர் சமூகம், பாஜக பிரமுகர் அவர்களின் உரையிலிருந்து... பிராமணன், அந்தணன், பார்ப்பனன், ஐயர், ஐயங்கார்...
No comments:
Post a Comment