Tuesday, February 19, 2019

கருப்பு பணம் இன்று வரை வராமலிருக்க காரணம் காங்கிரஸ்

உங்களுக்கு நான் கொடுக்கும் தகவல் மீது நம்பிக்கை இல்லையென்றால் நீங்களே இணையத்தில் தேடி இந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தேங்கி இருக்கும் இந்திய மக்களின் கருப்பு பணத்தை மீட்க ,
நடவடிக்கைகள் எடுக்க ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு (Special Investigation Team ) உச்ச நீதிமன்றம் 2011 லேயே உத்தரவிட்டது.

அந்த உத்தரவை 












செயல்படுத்தாமல் இன்று நேர்மையாளர்களைப் போல பேசும் மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் 2014 வரை கிடப்பில் போட்டார்கள் .

திரு மோடி அவர்கள் பிரதமரான பிறகு போட்ட முதல் கையெழுத்து இதுதான்.









ஆமாம், ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்தது … … …

இதற்கு பிறகு படிப்படியாக தகவல்கள் சேகரித்து வந்தது . பிறகு 2016 ல், தாமாக முன்வந்து வரி பாக்கியைச் செலுத்துங்கள் , வெறும் அபராதம் மட்டும் விதித்து விட்டுவிடுகிறோம்.
நாங்களாகப் பிடித்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரித்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் மோடி .





அதன்  அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்குத் தாமாக முன்வந்து வரி கட்டினார்கள் பல பணக்காரர்கள். அதன் அடிப்படையில் இந்திய அரசுக்கு ரூ. 73,920 கோடிகள் வரி கிடைத்தது.

அதாவது, அவ்வளவு கருப்பு பணம் அழிக்கப்பட்டது .

ஆனால் வாய்ப்புக் கொடுத்தும் பலர் திருந்தவில்லை . ஆகையால் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக demonetization பாய்ந்தது . இதனால் வங்கிகளுக்கு வராத பணம் என்னவோ 16,000 கோடிகள்தான் .

ஆனால் ஏதோ 16,000 கோடிகள்  மட்டுமே கருப்புப்பணம் அழிக்கப்பட்டதாக பரப்பப்படும் விஷயம் ஒரு மாபெரும் பொய்.











பணம் வங்கிகளுக்கு வந்துவிட்டாலே அது வெள்ளைப்பணமாக மாறி விட்டது என்கிற தகவல் மிகவும் தவறானது.

ஏனென்றால் அந்த பணத்திற்கு அதன் சொந்தக்காரர்கள் கணக்குக் காண்பிக்க வேண்டும்.

இந்திய மக்கள் அனுபவித்த கஷ்டங்களுக்குப் பெரிய லாபம் கிடைக்கத் துவங்கி உள்ளது.

ஆமாம்.

Demonetization க்கு பிறகு செய்யப்பட்ட Raid களினால் மட்டுமே ஏறத்தாழ
ரூ.25,000 கோடிகள்  கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

மொத்தம், பிரதமர்  மோடியின் முதல் மூன்றாண்டுகளில் ரூ. 1.37 லக்ஷம் கோடிகள் வருமானவரித் துறை raid மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.










இப்பொழுது இந்த Demonetization மூலம் , கிட்டத்தட்ட 3 லக்ஷதிற்கு மேல் போலி நிறுவனங்கள் (shell companies) கண்டுபிடிக்கப்பட்டன.

இவைஏழைகளின் நிறுவனங்கள் இல்லை. 

பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் நிறுவனங்கள் .

அவை அனைத்தையும் தடை செய்து , அதன் முதலாளிகளை மற்ற நிறுவனங்களுக்குத் தலைமை தாங்கத் தடை செய்தது .

அதில் சில முக்கியமான புள்ளிகள் சசிகலா, முன்னாள் காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி போன்றவர்கள் .

இப்பொழுது இந்த நிறுவனங்கள் டெபாசிட் செய்யப்பட்ட தொகை
ரூ.37,500 கோடிகள் .

இந்தப் பணத்தை உரிமை கோரி யாரும் வரவேயில்லை . ஆகையால் இந்தப் பணமும் இப்பொழுது அரசாங்கத்துக்குப் போகிறது .

இதைத் தவிர , மேலும் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 3 லக்ஷம்
கோடிகளுக்கு ஒழுங்காக கணக்குக் காண்பிக்கவில்லை . விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது .

இதுவும் அரசாங்கத்திற்கு  வரப் போகும் பணம் .

இதுவரை பிரதமர் மோடியால் மீட்கப்பட்ட கருப்புப் பணம் எவ்வளவு  என்று பார்க்கலாம் .

1,37,000 கோடிகள் (ரெய்டுகள் மூலம்) + 16,000 கோடிகள் (வங்கிக்கு வராத பணம்) + 73,920 கோடிகள் (Voluntary disclosure ) + 37,500 கோடிகள் - மொத்தம் 2,64,020 கோடிகள்.

மேலும் 3 லக்ஷம் கோடிகள் இதில் சேர வாய்ப்புள்ளது.

இதைத் தவிர , ஆதாருடன் மானியங்களுடன் இணைத்ததில் அரசாங்கம் சேமித்த பணம் (இடைத்தரகர்கள் வாங்கும் கமிஷன்களைத் தவிர்த்ததனால்) 85,000 கோடிகள் .

Make in India மூலம் , வெளிநாடுகளிலிருந்து இந்திய இராணுவத்திற்கு ஆயுதங்கள் இறக்குமதியைக் குறைத்து , உள்ளூரில் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தியதால் சேமித்த பணம் 1 இலட்சம் கோடிகள் .

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. இதெல்லாம் யார் பணம் ? நம்முடைய பணம் . இந்தப் பணமெல்லாம் இப்பொழுது எங்கே என்று கேட்கலாம் .

எந்த அரசும் நேரடியாக
பணத்தைக் கொடுத்து மக்களை சோம்பேறியாக்காது .

மாறாக தொழில் முதலீடுகள் , உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை உண்டாக்கும் .

அப்படி செய்ததால்தான் இந்த முத்திரா திட்டத்தின் கீழ் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிகிறது.

இன்னும் பல இடங்களில் புதிய சாலைகள் அமைப்பது , மின்சார வசதி ஏற்படுத்தித் தருவது போன்ற பணிகளைச் செய்ய முடிகிறது . இந்திய அரசு ஏற்கெனவே பற்றாக்குறை பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறது .

மோடி வந்த பொழுது பட்ஜெட்டில்
இருந்த பற்றாக்குறை  4.5 % ஆக இருந்தது . அது இப்பொழுது 3.3 % ஆகக் குறைந்திருக்கிறது .

இதனால் நமக்கென்ன நன்மை ?

இந்திய அரசாங்கம் மேலும் கடன் வாங்குவது , ரூபாய் நோட்டடிப்பது குறையும் . இதனால் விலைவாசியும் உயராது .

காங்கிரஸ் அரசின் கீழ் இலட்சம் கோடிகள் ஊழல்களைத்தான் கேள்விப்பட்டு  இருக்கிறோம்,

இப்பொழுது இலட்சக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் மிச்சமாவதைப் பார்க்கிறோம். இதற்குப் பெயர்தான் நல்ல நிர்வாகம் மக்களே.

நடுத்தர/அதற்கும் கீழே உள்ள மக்கள் எவரும் பாதிக்கப் படவில்லை.

இதன் பலன் உங்களுக்குத் தெரிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

ஆனால் நம் தேசம் சரியான பாதையில் போய்க் கொண்டு இருக்கிறது என்பது மட்டும் உறுதி . 

ஊடகங்களின் போலிச் செய்திகளையும், மீம்ஸ் பக்கங்களையும் நம்பி உணர்ச்சி வசப்பட்டுப் பேசாதீர்கள் .

உண்மைகளை விவரமாகப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு உண்மையாகவே இந்தியாவின் மீது அக்கறை இருந்தால் இதை சாமானியருக்குப் புரிய வையுங்கள் .

உங்கள் நட்பு வட்டத்திற்கு #Share செய்யுங்கள்.
(a news/from Facebook).

www.hindhu.news

No comments:

Post a Comment