Friday, March 15, 2019

பெண்களுக்கு எச்சரிக்கை பொள்ளாச்சி விவஹாரம் கடந்து வந்த பாதை



பொள்ளாச்சி விவகாரம் :
.
எல்லாரும் நல்லா புரிஞ்சிகோங்க..
.
அதாவது இப்போ வழக்கு குடுத்துருக்கே அந்த பெண் Feb -16 ம் தேதி திருநாவுகரசுக்கு பழக்கம் ஆகிருக்கு..
.
வாட்ஸ்சப்ல உங்க அப்பாவுக்கு தெரிந்த நபர்னு சொல்லி அறிமுகம் ஆகி பழக்கத்த வளத்துருகார்..
.
அப்புறம் பழக்கம் அதிகம் ஆகி Feb 23 ம் தேதி அந்த பெண் திருநாவுகரசு கூட கார்ல போயிருக்கு.. கூட சபரிராஜன் இருந்துருகான்..
.
கார்லயே அந்த பெண்ண தவறான முறைல தொட்டு இருக்கானுக.. ஆனா அந்த பொண்ணு கார்லயே கத்தி கூச்சல் போடவும் அந்த பெண் கழுத்துல இருந்த 1பவுன் செயின புடுங்கிட்டு ரோட்டுல தள்ளி விட்டு போயிடானுக..
.
கார் உள்ள நடந்ததை சபரிராஜன் போன்ல வீடியோ எடுத்துருக்கான்.. அடுத்த நாள் அந்த பொண்ணுக்கு சபரிராஜன் போன் பன்னி பணம் வேணும் இல்லைனா வீடியோவ நெட்ல விட்ருவேண்னு மிரட்டிருகான்..
.
அந்த பெண் அவங்க அண்ணன் கிட்ட சொல்ல அவங்க அண்ணனும், சொந்த காரங்களும் சேந்து திருநாவுகரசு & சபரிராஜன ரோட்டுல வச்சி அடிச்சிருகாங்க.. (நீங்க அந்த வீடியோ பாத்துருபீங்க)
.
அப்போ தான் அவிங்க போன்கள வாங்கி தன்னோட தங்கச்சியோட வீடியோவ Delete பன்ன வாங்கிருகாங்க.. அப்போ தான் அதுல அவர் தங்கச்சி வீடியோவ தவிர 150 பெண்களோட வீடியோ இருந்துருக்கு..
.
அப்ப தான் அதிகமா அடிச்சி உதச்சப்போ இதே மாதிரி மிரட்டி பணம் பிடுங்க பல பெண்கள மிரட்ட வீடியோ எடுத்து வச்சத ஒத்துகிட்டானுக.. (அந்த வீடியோவுலயே தெரியும்.. மீடியா இதை கட் பன்னி கட் பன்னி போட்டுச்சி)
அந்த பெண்ணும், அவங்க அண்ணனும் தெரிந்த உறவிணர்கள் மூலமா MLA பொள்ளாச்சி ஜெயராமன அனுகிருகாங்க.. (Feb -25)
.
பொள்ளாச்சி ஜெயராமன் இது குறித்து உடனே கோவை SP கிட்ட சொல்லி வழக்கு பதிஞ்சிருகாங்க..
.
வழக்கு பதிஞ்சி சதீஷ், சபரிராஜன கைது பன்னி திருநாவுகரச ஆந்திராவுல கைது பன்னிடாங்க.. அப்ப தான் சபரிராஜனோட நண்பரான நாகராஜன்
கைது பன்னி அடிதடி போன்ற வழக்கு போட்டு சிறைல அடச்சிருகாங்க.. அவன் ஜாமீன்ல வெளிய வந்துட்டான்..
.
இப்ப அந்த ஒரே ஒரு பெண் குடுத்த வழக்குல மட்டும் தான் போலீஸ் விசாரணை & நடவடிக்கை எடுத்துருக்கு..
.
அந்த பெண் இதுவரைக்கும் கற்பழிப்புனு வழக்கு குடுக்கல.. தன்னை மானபங்க படுத்தினதா தான் வழக்கு குடுத்துருக்கு..
.
அந்த FIR படி அந்த 4 பேர் மேலயும் 4பிறிவுகள்ல பதியபட்ட வழக்குகள். :
IPC 354A - பெண்ணை மானபங்க படுத்துதல், துன்புருத்துதல் (இது உறுதி படுத்தபட்டா 5வருச தண்டனை கிடைக்கும்)
.
IPC 354B - பெண்ணின் ஆடைகளை அவிழ்த்தல், கிழித்தல் (இது உறுதி படுத்த பட்டா 7வருச தண்டனை கிடைக்கும்)
.
IPC 392 - வழிப்பறி செய்தல்செயின பறிச்சதால இந்த பிறிவு (இது உறுதி செய்யபட்டா 10வருசம் தண்டனை கிடைக்கும்)
.
IT ACT 66E - ஆபாசமாக புகைபடம் எடுத்தல்.. நீங்க உங்க போன்ல ஒரு பெண்ணை ஆபாசமா வீடியோ எடுத்தாலே போதும் இந்த பிறிவுக்கு (இது உறுதி செய்யபட்டா 3வருசம் தண்டனை கிடைக்கும்)
.
இதுபோக தமிழகத்தோட சிறப்பு சட்டம் ஒன்னும் போட்ருகாங்க..
TamilNadu Womens Harresment Act Section 4 - இது பெண்களை கொடுமை படுத்துதல், துன்புருத்துதல் போன்ற பிறிவு.. (இது உறுதி படுத்த பட்டா 3வருசம் தண்டனை கிடைக்கும்)
.
இது போக குண்டர் சட்டம்..
.
ஆக மொத்தம் இந்த வழக்கு நிரூபிக்க பட்டா 30வருசமாவது சிறைல இருக்கனும்..
.
சிலர் சொல்ற மாதிரி அரசோட அழுத்தம் இருக்கு கட்சி பின்னாடி இருக்குனா இப்படி பட்ட பிறிவுகள போட முடியுமானு யோசிங்க..
.
அது போக இந்த பிறிவுகள்ல வழக்கு போட்டு 2நாட்கள் முன்னாடியே வழக்க CBCID க்கு மாற்றியது தமிழக அரசு.. இன்று அதையும் CBIக்கு மாற்றி இருக்காங்க..
.
இன்னோரு விஷயம் உடனே சுடுங்க, தூக்குல போடுங்கனு பொங்குறாங்க.. ஒரு பெண்ண கற்பழிச்சா தான் அவன் மேல அந்த பிறிவ வச்சி வழக்கு போட முடியும்..
.
வழக்கு யாரும் குடுக்காம போன்ல இருக்க வீடியோ அடிப்படைல ஒருத்தர கைது பன்னி வழக்கு போட்டா நாட்டுல உள்ள 90% இளைஞர்கள் தங்கள் போன்ல பிட்டு படத்த வச்சிருபாங்க.. அந்த பெண் யாருனே தெரியலனாலும் பரப்புனதா யாராவது வழக்கு குடுத்தா நீங்களும் கைது செய்ய படலாம்..
அப்படி பன்னினா அது நியாயமா இருக்குமா..? உங்க Galleryய ஒரு முறை பாத்துகோங்க..
அதனால எந்த புகாரும் இல்லாம யார் மேலயும் வீடியோ & கேள்வி செய்திகள வச்சி வழக்கு போட முடியாது அவங்களே ஒத்துகிட்டு 10 பெண்களோட பெயர & அடையாளங்கள சொன்னாலும் அந்த பொண்ணுக ஒத்துகிட்டு இவனுக மேல வழக்கு குடுத்தா மட்டும் தான் கற்பழிப்பு வழக்கு போட முடியும்..
இதுவரை எந்த பெண்ணும் தன்னை கற்பழிச்சதா அவங்க மேல புகாரோ, வழக்கோ குடுக்கல.. பின்ன எப்படி பன்ன முடியும்னு நீங்களே சொல்லுங்க..
.
இப்படி அரசியல் ஆக்கி 24மணி நேரமும் மீடியா நோட்டமிடும் ஒரு வழக்காக இதை மாத்தி நீங்க போராடிட்டு இருந்தா எப்படி ஒரு உண்மைலயே கற்பழிக்கபட்டு பாதித்த பெண் வழக்கு குடுக்க முன் வருவாங்க..?????
.
இதெல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் நக்கீரன்ல வந்தது என்ன வீடியோ..? அந்த வீடியோக்கள் எப்படி கிடச்சது..? அந்த வீடியோவுல உள்ள பெண் யார்..? அந்த சம்பவம் உண்மைலயே நடந்துச்சானு எந்த உண்மையான ஆதாரமும் இதுவரை இல்லை..
இதுக்கு மேல நீங்க உடனே நியாயம் வேணும், நடவடிக்கை எடுக்கனும்னு ரோட்டுல நின்னா நீங்களும் இந்த மீடியா  பலி ஆன ஆடுகள் தான்..
யாராவது சொல்றதையும், விஷயத்த முழுசா புரிஞ்சிகாமலும் உணர்ச்சி வசபட்டு கத்திட்டு இருக்காதீங்க.. இன்னைக்கு பொள்ளாச்சியில் வட்டமிடுகிற கழுகுகள் பிணந்தின்னி கழுகுகள்.. மக்களே.. சூதானமா இருந்துக்கிங்க..
-மீள்பதிவு

No comments:

Post a Comment

top posts