அம்பாளின் பாதத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும் நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இவள் பாதத்தில் நாம் பண்ணுகிற அர்ச்சனை அவர்களுடைய சிரஸுக்கும் பண்ணிய அர்ச்சனையாகிறது என்று ஆச்சாரியாள் சொல்கிறார்.
பவானி உன் தாஸன் நான் என்று துதிக்க ஆரம்பிக்கிறவனுக்கு அம்பாளாகவே ஆகியிருகிற அத்வைத மோக்ஷத்தை அவள் அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சொல்கிற போதும், அவளுடைய பாதத்தில் விஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலானவர்களின் கிரீடத்தில் உள்ள ரத்தின மணிகளிலிருந்து எழுகிற ஒளி கற்பூர ஹாரத்தி செய்வதுபோல் பிரகாசிக்கிறது என்கிறார்.
இப்படி எல்லா தேவர்களும் அவள் பாதத்தில் கிடப்பதாகச் சொல்வதற்கு தாத்பரியம் ஒரு தேவதை உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்பதல்ல. எல்லா சக்திகளும் – மநுஷ்யர்களின் சக்தி, மிருகங்களின் சக்தி, தேவர்களின் சக்தி, இயற்கையில் காண்கின்ற பல சக்தி, இவை எல்லாமும் மூலமான ஒரு சக்தியின் திவளைகளே என்பதுதான் அதன் தாத்பரியம்.
இதைத்தான் ஸயன்ஸிலும் ஒரே எனர்ஜி (Energy) பலவிதமான அணுக்களாக (Particle) அலைகளாக (Wave) ஆகியிருக்கிறது என்கிறார்கள்.
அந்த மூல சக்தியை அன்போடு ஆராதித்தால் அதுவும் அன்போடு அநுக்கிரஹம் பண்ணுகிறது. மற்ற தனித் தனித் தேவதைகளுக்கு இருக்கிற சக்தி எல்லாமும் இதனிடமிருந்து வந்ததுதான். எனவே அந்த சக்தியை அம்பாளாக ஆராத்திக்கிறபோது எல்லா தேவதைகளின் அநுக்கிரஹத்தையும் பெற்றுவிடலாம்.
சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் எல்லாம் அந்த ஒரே சக்தியிடமிருந்து உண்டானவைதாம். அதனால், அவர்களைப் பூஜிப்பதால் பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்களையும் பூஜித்ததாகிறது. இவள் ஆராதனையே ஸரஸ்வதி, லக்ஷ்மி ஆகியவர்களுக்கும் வழிபாடாகிறது.
வித்யை, செல்வம் எல்லாம் பக்தினுக்குச் சித்திக்கின்றன. அம்பாளை உபாஸித்தால் கிடைக்காததில்லை. சாஸ்திரங்கள் இதிலே பல பலன்களைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன.
அம்பாளை உபாஸிப்பதால் மிகவும் உத்தமமான வாக்கு சித்திக்கிறது. கவித்வத்தை விசேஷமாக அநுக்ரஹிக்கிறாள். காளிதாஸர் பூர்வத்தில் மிகவும் மந்தமாக இருந்தார் என்றும், உஜ்ஜயினியில் காளி அநுக்கிரஹம் கிடைத்தே அவர் கவி சிரேஷ்டரானார் என்றும் கதை கேட்டிருப்பீர்கள். ஊமையாக இருந்த மூகரும் அவளருளாலே க்ஷணத்தில் மகா கவியானார்.
தான் பெற்ற இன்பத்தை உலகமும் பெறும்படி செய்வது வாக்கு வழியாகத்தானே? இதனால்தான் மகா பெரியவர்களுக்கு அம்பாள் அருள் செய்தது மட்டுமின்றி, அந்தப் பேரருள் அசடுகளான நமக்கும் பாயவேண்டும் என்ற கருணையிலேயே அந்த மகான்கள் தம் அநுபவத்தைப் பாடுவதற்கான வாக்கு வன்மையையும் வருஷித்தாள்.
கவித்வம், சங்கீதம் முதலிய கலைகள் எல்லாம் அம்பிகையின் அநுக்கிரஹத்தால் உண்டாகின்றன. பொதுவாக இதற்கெல்லாம் ஸரஸ்வதியை அதி தேவதையாகச் சொல்கிறோம்.
இப்படிப்பட்ட ஸரஸ்வதி, அம்பாளின் சந்நிதானத்தில் எப்போதும் வீணையோடு கானம் பண்ணிக் கொண்டிருக்கிறாளாம். என்ன பாட்டுக்கள் பாடுகிறாள்? அம்பாளின் பெருமையைப் பற்றியா? இல்லை.
மகாபதிவிரத்தையான அம்பாளுக்கு ஈச்வரனைப் பாடினாலே சந்தோஷம். அதன்படி வாணி ஈசுவரப் பிரபாவத்தைப் பாடிக்கொண்டிருக்கிறாள்.
அம்பாள் அதை ரொம்பவும் ரஸித்து ஆனந்தப்படுகிறாள். கேட்கிறவர்கள் ஆனந்திப்பதே பாடுகிறவனுக்கும் ஆனந்தத்தைத் தந்து மேலும் உற்சாகப்படுத்தும். அப்போதுதான் வித்வானுக்கு மேலே மேலே கற்பனை விருத்தியாகும். கேட்கிறவன் தப்புக் கண்டுபிடிக்கிற மாதிரியே உட்கார்ந்திருந்தால், வித்வானுக்கு சுபாவத்தில் இருக்கிற பிரதிபா சக்தியும் போய்விடும்.
அம்பிகை ஆனந்தத்தோடு உத்ஸாகப் படுத்தப் படுத்த ஸரஸ்வதி பரமாற்புதமாக கானம் பண்ணிக்கொண்டே போகிறாள். அம்பாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டுத் தலையை ஆட்டிக்கொண்டு பேஷ் பேஷ் என்று வாய் விட்டுச் சொல்லி விடுகிறாள். அவ்வளவுதான்.
அம்பாளுடைய அந்த வாக்கின் மாதூர்யத்தில் ஸரஸ்வதியின் வீணா நாதம் அத்தனையும் ஒன்றுமில்லை என்றாகி விடுகிறதாம். இப்படிப்பட்ட மதுரவாக்குக் கொண்டவளுக்கு முன்பா என் வித்யையைக் காட்டினேன்? என்று வெட்கப்பட்டுக்கொண்டு ஸரஸ்வதி தன் வீணையை உறையில் வைத்து மூடி விடுகிறாளாம்.
விபஞ்ச்யயா காயந்தீ என்று ஆரம்பிக்கிற ஸெளந்தரிய லஹரி ஸ்லோகம் இந்த சம்பத்தை நாடகம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி வர்ணிக்கிறது.
அம்பாளை உபாஸிப்பதால் நம் ஆனந்தத்தைப் பிறர்க்கும் தர வைக்கிற ஸங்கீதம் முதலான சகல கலைகளிலும் எளிதில் ஸித்தி பெறலாம் என்பது அர்த்தம்.
அம்பாளை வழிபடுவதால் குருபக்தி, பதிபக்தி இவையும் விசேஷமாக விருத்தியாகும்.
மேலும் மாதங்கியை சிந்திப்போம். வாழ்க அவள் நாமம். நமோ தேவ்யை.
[02/03, 7:59 PM] Va mirali mira: சிவனின் 3 மகள்கள் யார் என்றும் அவர்களின் பிறப்பின் ரகசியங்களும் தெரியுமா?
அழிக்கும் கடவுளான சிவனை பற்றி நாம் அறிந்தது மிகவும் குறைவுதான். ஏனெனில் பெரும்பாலானவர்கள் அறிந்தது சிவபெருமானுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் அது உண்மையல்ல.
ஆம் சிவனுக்கு கார்த்திகேயன், கணேசன் மற்றும் ஐயப்பன்மட்டுமின்றி மூன்று மகள்களும் இருக்கிறார்கள். சிவபெருமானின் மகன்கள் அளவிற்கு அவரின் மகள்கள் புகழ் பெறவில்லை. ஆனால் அவர்கள் இந்தியாவின் பல மூலைகளில் அவர்களை இன்னும் வழிபடுகின்றனர். சிவபெருமானின் மூன்று மகள்களை பற்றியும், அவர்களின் சிறப்புகளை பற்றியும் இந்த பதிவில் காண்போம் . . . .
சிவபெருமானின் மகள்கள்
சிவனின் மகள்களின் பெயர்கள் அசோக சுந்தரி, ஜோதி மற்றும் வாசுகி. இந்த தகவல் பலருக்கும் அறியாத ஒன்று. ஆனால் இதற்கான குறிப்புகள் சிவபுராணத்திலும், வேறு சில புராணங்களிலும் உள்ளது. அவற்றின்படி இவர்களின் ஒவ்வொருவரின் பிறப்பிற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கின்றது.
★அசோக சுந்தரி★
சிவன் மற்றும் பார்வதியின் முதல் மகள் அசோக சுந்தரி ஆவார். இவரை பற்றிய விரிவான குறிப்புகள் பத்ம புராணத்தில் உள்ளது. அதன்படி பார்வதி தேவி தன் தனிமையை போக்கி கொள்வதற்காகவே அசோக சுந்தரியை உருவாக்கினார். அவரின் பெயர் காரணம் என்னவெனில் தனது சோகத்தை போக்க உருவாக்கப்பட்டதாலும், மிகவும் அழகாக இருந்ததாலும் அவருக்கு அசோக சுந்தரி யென்று பெயர் சூட்டினார்.
இவர் குஜராத்தில் எல்லோராலும் வணங்கப்படுகிறார். இந்தியாவின் மற்ற பகுதிகளில் இவரை பற்றி யாரும் அறியவில்லை.
★ஜோதி★
சிவனின் இரண்டாவது மகள் ஜோதி. அவரின் பெயரே அதன் பொருளை விளக்குகிறது. இவர் ஒளியின் கடவுளாக அனைத்து கோவில்களிலும் வணங்கப்படுகிறார். ஜோதியின் பிறப்பிற்கு பின் இரண்டு கதைகள் உள்ளது. முதல் கதை என்னவென்றால் அவர் சிவனின் ஒளிவட்டத்திலிருந்து பிறந்தார் என்று கூறப்படுகிறது.
இரண்டாவது கதைஎன்னவெனில் ஜோதி பார்வதி தேவியின் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியிலிருந்து உருவானவர் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டில் எது உண்மையென்று யாருக்கும் தெரியாது. இந்த ஜோதியானவர் ஜுவாலாமுகி என்ற பெயரால் தமிழ்நாடு முழுவதும் பல கோவில்களில் வணங்கப்படுகிறார்.
★வாசுகி★
வாசுகி என்பவர் அனைத்து கோவில்களிலும் பாம்புக்கடியை குணமாக்கும் கடவுளாக கும்பிடப்படுகின்றார். இவர் சிவபெருமானின் மகள் ஆனால் பார்வதியின் மகள் இல்லை. ஏனெனில் பாம்புகளின் கடவுளான கத்ரு செதுக்கிய சிலையின் மீது சிவபெருமானின் உயிரணுக்கள் விழுந்ததால் வாசுகி பிறந்தார். அதனால்தான் அவர் சிவனின் மகளாகவும், பார்வதியின் மகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. சிவபெருமான் ஆலகால விஷத்தை குடித்தபோது அவரை காப்பாற்றியது வாசுகிதான். இவருக்கு மானசா என்ற ஒரு பெயரும் உள்ளது.
இவரின் அதீத கோபத்தால் இவர் தன் தந்தை சிவன், பார்வதி, கணவர் என அனைவராலும் ஒதுக்கப்பட்டார். இவர் மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமாக வணங்கப்படுகிறார். மேலும் இவர் பார்வதி தேவியை எப்பொழுதும் வெறுத்துக்கொண்டே இருந்தார். இவருக்கென எந்தவித உருவமும் கிடையாது ஆனால் பாம்பின் வடிவத்தில் வணங்கப்படுகிறார். இவர் பாம்புக்கடி மற்றும் அம்மை நோய்களை குணப்படுத்தக்கூடியவர் என்று நம்பப்படுகிறது....சிவாய நம..
No comments:
Post a Comment